

சாயர்புரம்:
சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ககத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சங்க தலைவர் அறவாழி தலைமை தாங்கி, 9 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.34 லட்சத்து 55 ஆயிரத்து 849 மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
செயலாளர் சகுந்தலா தேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் வங்கி மேலாளர் பெருமாள், காசாளர் கிருபாகரன் மற்றும் வங்கி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.