search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NSS Camp"

    • காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் அருணாசலபுரத்தில் 7 நாட்கள் நடைபெற்றது.
    • முகாமின் போது சுகாதாரப்பணிகளை செய்தல், இலவச மருத்துவ முகாம், பனை விதைகள் நடுதல் ஆகியவை நடந்தன.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் அருணாசலபுரத்தில் 7 நாட்கள் நடைபெற்றது. இதில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் 25 பேர் பங்கேற்றனர்.

    இந்த முகாமின் போது இல்லங்கள் தோறும் புள்ளி விவரங்களை சேகரித்தல், சுகாதாரப் பணிகளை செய்தல், இலவச மருத்துவ முகாம், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம், கால்நடை மருத்துவ முகாம், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பனை விதைகள் நடுதல் ஆகியவை நடந்தன.

    முகாம் நிறைவு விழா நடைபெற்றது. பள்ளியின் ஆட்சி மன்ற தலைவர் அஷ்ரப் தலைமை தாங்கினார். தாளாளர் முகம்மது லெப்பை முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் செய்யது மைதீன் வரவேற்று பேசினார். கணினி ஆசிரியர் ஆசாத் ஜவகர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் முகம்மது சித்தீக், தமிழ் ஆசிரியர் முகம்மது இஸ்மாயில், அருணாச்சல புரம் தேசிய தொடக்கப் பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம், தலைமையாசிரியை சுகந்தி பால்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சேக் பீர்முஹம்மது காமில், ஆசிரியர் ராமச்சந்திரன், ஆவண எழுத்தர் மகாராஜன், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சங்கர் செய்திருந்தார். தமிழ் ஆசிரியர் சின்னத்துரை நன்றி கூறினார்.

    • 10 நாட்கள் நடைபெற்ற முகாமின் கடைசி நாளில் மாணவ, மாணவிகள் 1,000 செம்மரங்கள் நட்டனர்.
    • விழாவை ஏரல் தாசில்தார் கண்ணன் தொடங்கி வைத்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரத்தில் உள்ள டாக்டர் ஜி.யு. போப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் திருப்பணி செட்டிகுளத்தில் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற முகாமின் கடைசி நாளில் நலப்பணி மாணவ, மாணவிகள் 1,000 செம்மரங்கள் நட்டனர்.

    நிகழ்ச்சிக்கு தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜாபிந்த் முன்னிலை வகித்தார்.

    விழாவை ஏரல் தாசில்தார் கண்ணன் தொடங்கி வைத்தார். வளசகாரன்விளை டாக்டர் ஜெபராஜ் மற்றும் திருப்பணி செட்டிகுளம் ஊராட்சி தலைவர் சுயம்புலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இதில் ரஜினி, எபனேசர், கமலேஷ், திருப்பணி செட்டிகுளம் பஞ்சாயத்து துணைத் தலைவர் சரளா, செயலாளர் இந்துமதி, மற்றும் மாணவ- மாணவிகள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் மற்றும் உதவி பேராசிரியர் டென்னிசன் செய்திருந்தார்.

    • பெண்கல்வி குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
    • இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் அலகு -1 சார்பாக சிறப்பு முகாம் பெரியாயிபாளையம் கிராமம் பழங்கரை ஊராட்சியில் நடைப்பெற்றது.

    சிறப்பு முகாமின் முதல் நாள் முகாம் தொடக்க விழா அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சேதுமாதவன் முன்னிலையில் நடைப்பெற்றது. முகாமின் இரண்டாம் நாள் பூண்டி காவல்நிலையம் தனலட்சுமியால் பெண்கல்வி குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    இணையவழி பரிவர்த்தனை குறித்த நாடகம் பொதுமக்கள் முன்பு நடத்தப்பட்டது. 3-ம் நாள் பழங்கரை திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மற்றும் காமாட்சி அம்மன் கோவில் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது. 4-ம் நாள் இலவச கண் பரிசோதனை முகாம் லோட்டஸ் கண் மருத்துவமனையால் நடத்தப்பட்டது. இதில் 200 பொதுமக்கள் பயன்பெற்றனர்.

    5-ம்நாள் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி மற்றும் சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. 6-ம் நாள் காமாட்சி அம்மன் கோவில் மற்றும் மண்டபம் தூய்மைப்படுத்தப்பட்டது.முகாமின் நிறைவு விழா காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏ.வி.பி கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கவுன்சிலர் சேதுமாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. மரக்கன்றுகளும் நடப்பட்டது.முகாமுக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியைகள் சந்தானலட்சுமி மற்றும் தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.

    • குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி ,கோவில் உழவார பணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.
    • மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட குழு மாணவிகள் மற்றும் அலுவலர் பிரியா, துணை திட்ட அலுவலர்கள்மாலினி ,மகாலட்சுமி கலந்து கொண்டனர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.ஜெ.என்.பாளையத்தில்குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி ,கோவில் உழவார பணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.

    இதில் ஜே.என் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ,துணைத் தலைவர் முருகானந்தம் கலந்து கொண்டனர். ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட குழு மாணவிகள் மற்றும் அலுவலர் பிரியா, துணை திட்ட அலுவலர்கள்மாலினி ,மகாலட்சுமி கலந்து கொண்டனர். 

    • முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கினார்.
    • மாணவர்கள் தூய்மை பணி உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.

    கடையம்:

    வெங்கடாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாதாபட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார்.

    ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்ரா பாபு, பள்ளி நிர்வாக அதிகாரி அருள் அந்தோணி மிக்கேல், தலைமையாசிரியை அமிர்த சிபியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பீட்டர் ராஜ் வரவேற்று பேசினார். தொழிலதிபர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் மாணவர்கள் தூய்மை பணி உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். முகாமானது தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற இருக்கின்றது. முடிவில் உதவி திட்ட அலுவலர் செபஸ்டியன் நன்றி கூறினார். இதில் ஊராட்சி செயலர் பாரத், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×