search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமுருகன்பூண்டி  ஏ.வி.பி.,கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம்
    X

    சிறப்பு முகாம் நடைப்பெற்ற காட்சி.

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி.,கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம்

    • பெண்கல்வி குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
    • இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் அலகு -1 சார்பாக சிறப்பு முகாம் பெரியாயிபாளையம் கிராமம் பழங்கரை ஊராட்சியில் நடைப்பெற்றது.

    சிறப்பு முகாமின் முதல் நாள் முகாம் தொடக்க விழா அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சேதுமாதவன் முன்னிலையில் நடைப்பெற்றது. முகாமின் இரண்டாம் நாள் பூண்டி காவல்நிலையம் தனலட்சுமியால் பெண்கல்வி குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    இணையவழி பரிவர்த்தனை குறித்த நாடகம் பொதுமக்கள் முன்பு நடத்தப்பட்டது. 3-ம் நாள் பழங்கரை திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மற்றும் காமாட்சி அம்மன் கோவில் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது. 4-ம் நாள் இலவச கண் பரிசோதனை முகாம் லோட்டஸ் கண் மருத்துவமனையால் நடத்தப்பட்டது. இதில் 200 பொதுமக்கள் பயன்பெற்றனர்.

    5-ம்நாள் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி மற்றும் சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. 6-ம் நாள் காமாட்சி அம்மன் கோவில் மற்றும் மண்டபம் தூய்மைப்படுத்தப்பட்டது.முகாமின் நிறைவு விழா காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏ.வி.பி கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கவுன்சிலர் சேதுமாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. மரக்கன்றுகளும் நடப்பட்டது.முகாமுக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியைகள் சந்தானலட்சுமி மற்றும் தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×