பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கினார்.மாணவர்கள் தூய்மை பணி உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.
மாதாபட்டணம் பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் மாணவர்கள் தூய்மை பணியினை மேற்கொண்ட காட்சி
மாதாபட்டணம் பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் மாணவர்கள் தூய்மை பணியினை மேற்கொண்ட காட்சி
Published on

கடையம்:

வெங்கடாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாதாபட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்ரா பாபு, பள்ளி நிர்வாக அதிகாரி அருள் அந்தோணி மிக்கேல், தலைமையாசிரியை அமிர்த சிபியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பீட்டர் ராஜ் வரவேற்று பேசினார். தொழிலதிபர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் மாணவர்கள் தூய்மை பணி உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். முகாமானது தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற இருக்கின்றது. முடிவில் உதவி திட்ட அலுவலர் செபஸ்டியன் நன்றி கூறினார். இதில் ஊராட்சி செயலர் பாரத், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com