search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Volleyball Tournament"

    • கைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
    • தமிழ்நாடு போலீஸ் 2-0 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பையும் தோற்கடித்தன.

    நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    'ஏ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஐ.ஓ.பி. 25-22, 25-19 என்ற கணக்கில் எஸ்.டி.ஏ.டி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. இந்த பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வருமானவரி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

    'பி' பிரிவில் நடந்த ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். 26-24, 25-16 என்ற கணக்கில் இந்தியன் வங்கியை தோற்கடித்தது. இந்தியன் வங்கி அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது. மற்றொரு போட்டி டி.ஜி. வைஷ்ணவா 2-1 என்ற கணக்கில் ஜி.எஸ்.டி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

    பெண்கள் பிரிவில் ஐ.சி.எப்.2-0 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்.அணியையும், தமிழ்நாடு போலீஸ் 2-0 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பையும் தோற்கடித்தன.

    • நெல்லை மாவட்ட பள்ளி மாணவ- மாணவர்க ளுக்கான மாவட்ட அளவி லான கைப்பந்து போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் போட்டியும் நடைபெற்றது.
    • போட்டியினை வள்ளியூர் டி.டி.என். கல்வி குழும தலைவர் லாரன்ஸ், தாளா ளர் ஹெலன் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்ட பள்ளி மாணவ- மாணவர்க ளுக்கான மாவட்ட அளவி லான கைப்பந்து போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்களுக்கான கைப்பந்து போட்டியும், பெண்க ளுக்கான கைப்பந்து போட்டியும் நடைபெற்றது.

    போட்டியினை வள்ளியூர் டி.டி.என். கல்வி குழும தலைவர் லாரன்ஸ், தாளா ளர் ஹெலன் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    நெல்லை மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியின் ஒருங்கிணைப் பாளர் லில்லி வரவேற்று பேசினார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அம்பாச முத்திரம் பி.எல்.ட.பி.ஏ. மேல் நிலைப்பள்ளி மாணவி கள் முதலிடம் பெற்றனர்.

    ஆவரைகுளம் பாலை மார்த்தாண்டம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-ம் இடம் பெற்றனர். 17 வய துக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சங்கர் நகர் கீதா கிருஷ்ணமூர்த்தி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலி டத்தையும், பாளையங் கோட்டை சின்மயா வித்யா லயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தையும் பெற்றனர்.

    19 வயதுக்குட்பட்டோ ருக்கான பிரிவில் அம்பா சமுத்திரத்தில் உள்ள பாபநாச தொழிலாளர் நல உரிமைக்கழக மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து அசத்தி னர். 2-ம் இடத்தையும் பாளையங்கோட்டை சாரா டக்கர் பெண்கள் மேல் நிலை ப்பள்ளி மாணவிகள் பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற அணி யினர் மாநில அளவி லான போட்டிக்கு தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

    அவர்களுக்கான சான்றிதழ்க ளையும் வெற்றி கேடயங்களையும் கல்லூரி யின் தலைவர் லாரன்ஸ் வழங்கி, மாணவிகளின் திறனை பாராட்டி தனது வாழ்த்துக் களை தெரி வித்துக் கொண்டார்கள்.

    இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் செய்திருந்தார்.

    • திண்டுக்கல் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
    • இப்போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டன.

    திண்டுக்கல்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளை மாவட்ட கலெக்டர் பூங்கொடி இன்று தொடங்கி வைத்தார்.

    இப்போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டன. நாளை பெண்க ளுக்கான வாலிபால் போட்டிகள் நடைபெற வுள்ளன.

    இதில் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, நடுவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் இறகுப்பந்து போட்டி நடந்தது.
    • மதுரை எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 4-வது இடத்தையும் பிடித்தது.

    அருப்புக்கோட்டை

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த இறகுப்பந்து போட்டி அருப்புக்கோட்டை சைவ பானு சத்திரிய கல்லூரியில் நடந்தது. இந்த போட்டிகளை கல்லூரி முதல்வர் செல்லத்தாய் தொடங்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் ஜாக்லின் பெரியநாயகம் வாழ்த்துரை வழங்கினார். போட்டிகளின் முடிவில் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல் இடத்தையும், திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி 2-ம் இடத்தையும், அருப்புக்கோட்டை சைவ பானு சத்ரிய கல்லூரி 3-வது இடத்தையும், மதுரை

    எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 4-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி செயலர் முத்து தினகரன் கோப்பைகளை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன் சான்றிதழ்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் மணிகண்டன், மாதவன் மற்றும் ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வள்ளியூர் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கைப்பந்து விளையாட்டில் சூப்பர் சீனியர் பிரிவில் ஹார்வேடு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர்.

     வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வள்ளியூர் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கைப்பந்து விளையாட்டில் சூப்பர் சீனியர் பிரிவில் ஹார்வேடு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ரியான், ஜுடுவின், புகழேந்தி, முத்துகிருஷ்ணன், சாத்ராக், சாரோன், எட்வின், ரினு, யோகேஷ், ரிஜோ, சிவகுரு,சுபிஷ் மற்றும் டஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் டாக்டர் தினேஷ், பள்ளி முதல்வர் முருகேசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

    • சிவத்தையாபுரத்தில் ஆனந்த விநாயகர் கிளப் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் 3 நாட்கள் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நடக்கிறது.
    • அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி- சென்னை வைஷ்ணவா கல்லூரிகளுக்கு இடையான போட்டியினை தொடங்கி வைத்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே சிவத்தையாபுரத்தில் ஆனந்த விநாயகர் கிளப் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் 3 நாட்கள் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியின் 2-வது நாளன்று சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி- சென்னை வைஷ்ணவா கல்லூரிகளுக்கு இடையான போட்டியினை தொடங்கி வைத்தார். சிவத்தையாபுரம் முத்துமாலையம்மன் பள்ளிகள் கல்விக்குழு தலைவர் பரமசிவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் சுதர்சன் ராஜா, சாயர்புரம் நகர செயலாளர் துரைசாமி ராஜா,சிவத்தையாபுரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பால்ராஜ், துணைத்தலைவர் சரவணகுமார் ராஜூ, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், பவுன்சிங், அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் பாண்டியன், பார்த்திபன், செல்வ குரு, எட்வர்ட், பட்டுராஜ் மற்றும் ஊர் பிரமுகர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    • வாலிபால் போட்டிக்கான பரிசுத்தொகை முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.9 ஆயிரம் , த்ரோபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    • ரூ.5 லட்சமும், த்ரோபால் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூடப்பாக்கம் குலோத்துங்க சோழன் விளையாட்டு திடலில் ஈஷா புத்துணர்வு கோப்பை வாலிபால் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

      இதில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்துகொண்டு வாலிபால் போட்டியினை தொடங்கி வைத்தார். பாஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், குலோதுங்க சோழன் விளையாட்டு கழக தலைவர் தலைவர் அய்யனார் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கேப்டன் ராமதாஸ் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முதல் கட்ட வாலிபால் போட்டிக்கான பரிசுத்தொகை முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.9 ஆயிரம் , த்ரோபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    வாலிபால் இறுதிப்போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.5 லட்சமும், த்ரோபால் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியினை ஈஷா கணேசன் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக் கான ஏற்பாட்டினை ஈஷா நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • தமிழக அளவிலான மாநில கைப்பந்து போட்டி
    • ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 15 -ந் தேதி வரை சேலத்தில் நடைபெறஉள்ளது.

    விழுப்புரம்:

    தமிழக அளவிலான மாநில கைப்பந்து போட்டி வரும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 15 -ந் தேதி வரை சேலத்தில் நடைபெறஉள்ளது. மாநில அளவிலான போட்டியில்பங்கேற்க விழுப்புரம் மாவட்ட வாலிபால் வீரர்கள் 18 வயதிற்குற்பட்டவர்களை தேர்வுசெய்யும் பணி விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிக்கு மாவட்ட தலைவர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி வீரர்கள் தேர்வு போட்டியை தொடங்கி வைத்தார்.

    மாநில வாலிபால் கழக இணை செயலாளர் மணி முன்னிலையில் நடந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். மிகச்சிறந்த முறையில் வாலிபால் விளை யாடும் 12 வீரர்கள் தேர்வு செய்ய போட்டி நடந்தது.நடுவர்கள் காளிதாஸ், ஜோதிப்பிரியா, மணிகண்டன், சுபாஷ், சேதுபதி, பிரேம், பாலாஜி, அரவிந்த் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்தின் கருவடிக்குப்பம் ஸ்பைடர் விளையாட்டுக் கழகமும் அரியாங்குப்பம் பாரதிதாசன் கைப்பந்து கழகமும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
    • இறுதி போட்டியில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஏ.பி.ஆர். அணி தலைவர் ரமணி பூபதி ஆகியோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அளவிலான சீனியர் ஆண்கள் கைப்பந்து போட்டி அரியாங்குப்பம் ஏ.பி.ஆர். விளையாட்டு கழகத்தின் சார்பில் நடைபெற்றது.

    3 நாட்கள் நடந்த இப்போட்டியில் புதுவை மாநில முன்னணி கைப்பந்து அணிகள் விளையாடின. இதில் காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்தின் கருவடிக்குப்பம் ஸ்பைடர் விளையாட்டுக் கழகமும் அரியாங்குப்பம் பாரதிதாசன் கைப்பந்து கழகமும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    இறுதி போட்டியில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஏ.பி.ஆர். அணி தலைவர் ரமணி பூபதி ஆகியோர் பங்கேற்றனர். 3 போட்டிகளில் முதல் ஆட்டம் ஸ்பைடர் 25-23, 2-வது ஆட்டம் பாரதிதாசன் 25-21, 3-வது ஆட்டம் ஸ்பைடர் 25-19 என்ற புள்ளிகள் பெற்றது. பாரதிதாசன் அணி ஒரு புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தையும், ஸ்பைடர் அணி 2 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. சுழற்கோப்பை, பரிசு பொருட்களை வழங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில பொறுப்பாளர் கீதநாதன் நன்றி கூறினார்.

    • வாலிபால் போட்டி திருவனந்தபுரத்தில் மாா்ச் 22 ந் தேதி தொடங்கி மாா்ச் 26 ந் தேதி வரையில் நடைபெறுகிறது.
    • மாா்ச் 20 -ந் தேதி காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    சென்னையில் நடை பெறும் மாநில அளவிலான வாலிபால் தோ்வு போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்ட அரசு ஊழியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எம்.ராஜகோபால் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    மாநில அரசு ஊழியா்களுக்கான தேசிய அளவிலான வாலிபால் போட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் மாா்ச் 22 ந் தேதி தொடங்கி மாா்ச் 26 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான மாநில அளவிலான தோ்வு போட்டி சென்னை ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாா்ச் 20 -ந் தேதி காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் பங்கேற்க பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியா்கள் மாநில அளவிலான தோ்வு போட்டியில் பங்கேற்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 74017-03515 என்ற செல்போன் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதலிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார்கள்.
    • மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.

    பல்லடம் :

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழக்கம். குறுமையம், கல்வி மாவட்டம் என அனைத்திலும் முதலிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார்கள்.

    அந்தவகையில் இந்த 2022 - 2023-ம் கல்வி ஆண்டின் 14 வயதிற்கு உட்பட்ட மாநில அளவிலான எறிபந்துப் போட்டி திருச்சி மாவட்டம், கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    அதில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர், பொ.வெ.க. மேல்நிலைப்பள்ளி வீரர்கள் காலிறுதியில் திருவள்ளூர் மாவட்ட அணிக்கு எதிராகவும், அரையிறுதியில் தருமபுரி மாவட்ட அணிக்கு எதிராகவும் விளையாடி வெற்றி பெற்றனர்.

    இறுதிப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியுடன் விளையாடி அதிலும் வெற்றி பெற்று மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.

    இந்த பள்ளி அணியினர் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் நிரேஷ்குமார், சுகுணா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபாலன் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் ஆகியோர் பாராட்டினர்.

    • கொங்கல்நகரம் கிராமத்தைச்சேர்ந்த நகுல்நந்தன் விளையாடிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • சொந்த கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    உடுமலை:

    மத்திய அரசு சார்பில், ஹரியானா மாநிலத்தில், தேசிய அளவில்இளைஞர்களுக்கான, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்தது.இதில் தமிழக வாலிபால் போட்டியில் தமிழக அணி இறுதிப்போட்டியில், ஹரியானா மாநில அணியை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

    இதில் தமிழக அணிக்காககுடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம் கிராமத்தைச்சேர்ந்த நகுல்நந்தன் விளையாடிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தமிழக அணிக்காக போட்டியில் பங்கேற்று திரும்பிய அவருக்கு சொந்த கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கொங்கல்நகரம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சித்தலைவர் விஸ்வநாதன் மற்றும் பாசன சபை தலைவர் நாகராஜன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று நகுல்நந்தனுக்கு பாராட்டு தெரிவித்தனர். கிராம பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து மகிழ்ந்தனர்.

    ×