இறகுபந்து போட்டி பரிசளிப்பு விழா

இறகுபந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.
இறகுபந்து போட்டி பரிசளிப்பு விழா
Published on

மேலூர்

மேலூர் சுப்ரீம் லயன்ஸ் கிளப் சார்பில் தாலுகா அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது. 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

முதல் பரிசை அருண், பிரேம் நசீர் அணியும், 2-ம் பரிசை அசோக், அயூப்கான் அணியும், 3-ம் பரிசை ரபிக், பாண்டி அணியும், 4-ம் பரிசை துரை, முத்து நாச்சியப்பன் அணியும் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் சரவணன், செயலாளர் மணி, பொருளாளர் நீதிபதி, கூடுதல் பொருளாளர் செல்வம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், இணை ஒருங்கிணைப்பாளர் சேவுகமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com