என் மலர்
புதுச்சேரி

இந்திய அளவில் நடந்த இறகு பந்து இரட்டையர் பிரிவு போட்டியில் புதுவை அணி சார்பில் வீரர்கள் சுந்தரராமன், ஜெயமணி ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.
இறகுபந்து போட்டியில் புதுவை அணி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை
- உத்ரபிரதேசம், வாரணாசியில் மாஸ்டர் கேம்ஸ் பேடரேஷன் சார்பில் 5-வது தேசிய மாஸ்டர் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
- இதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை மாஸ்டர் கேம்ஸ் பேடரேஷன் பொதுச்செயலாளர் வினோத்குமார் வழங்கினார்.
புதுச்சேரி:
உத்ரபிரதேசம், வாரணாசியில் மாஸ்டர் கேம்ஸ் பேடரேஷன் சார்பில் 5-வது தேசிய மாஸ்டர் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
புதுவையில் இருந்து ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி ஊழியர் சுந்தரராமன், புதுவையை சேர்ந்த ஜெயமணி ஆகியோர் 35 வயது உடையவர்களுக்கான இறகு பந்துபோட்டியில் இரட்டையர் பிரிவில் விளையாடினர்.
இறுதியில் மத்திய பிரதேசம், புதுவை அணிகள் மோதின.
இதில் புதுவை அணி போராடி தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.
இதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை மாஸ்டர் கேம்ஸ் பேடரேஷன் பொதுச்செய லாளர் வினோத்குமார் வழங்கினார்.
வெள்ளி பதக்கம் பெற்ற சுந்தரராமனை ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி டீன். டாக்டர் கொட்டூர், துணை முதல்வர் டாக்டர் ராஜன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.






