search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எறிபந்து  போட்டியில் பொங்கலூர் பள்ளி சாதனை
    X

    கோப்புபடம். 

    எறிபந்து போட்டியில் பொங்கலூர் பள்ளி சாதனை

    • இந்தக் கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான எறிபந்துப் போட்டி நாமக்கல் மாவட்டம், கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
    • பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் குறுமையம், கல்வி மாவட்டம் என அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெறும் அணிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார்கள். அந்த வகையில் இந்தக் கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான எறிபந்துப் போட்டி நாமக்கல் மாவட்டம், கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    அதில் பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காலிறுதியில் தென்காசி மாவட்ட அணிக்கு எதிராகவும், அரையறுதியில் கரூர் மாவட்ட அணிக்கு எதிராகவும் விளையாடி வெற்றி பெற்றனர். நிறைவாக நாமக்கல்லில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோயம்புத்தூர் மாவட்ட அணியுடன் விளையாடி வெற்றி பெற்று மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர். பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப் பள்ளி அணியினர் தொடர்ந்து 2-வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் நிரேஷ் , சுகுணா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபால், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×