நட்டாத்தி ஊராட்சியில் மே தின கிராமசபை கூட்டம்

கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டபோது எடுத்த படம்.
கூட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டபோது எடுத்த படம்.
Published on

சாயர்புரம்:

நட்டாத்தி ஊராட்சியின் மே தின கிராமசபைக் கூட்டம் கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பண்டாரம் முன்னிலை வகித்தார். பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப், வார்டு உறுப்பினர்கள் ஜான்சிராணி, சரோஜா, பண்டாரம், மணி மந்திரம் அங்கன்வாடி பணியாளர்கள் ஜோதிகனி, உச்சிமாகாளி, தேவிகலா டிவிஎஸ் தொண்டு நிறுவனம் சார்பாக செல்வி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளச்சாமி பணித்தள பொறுப்பாளர்கள் எஸ்தர், மருதவள்ளி, மேரி ஆனந்தி மற்றும் ஊராட்சி பொதுமக்கள், சுயஉதவிக்குழுவினர் 100 நாள் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2022-23-ம் நிதி ஆண்டிற்கான வரவு-செலவுகள், 2021-22 ஊராட்சி தணிக்கை அறிக்கை, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, அனைவருக்கும் வீடு திட்டம் கணக்கெடுப்பு ஒப்புதல், நெகிழி ஒழிப்பு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், 15-வது நிதிக்குழு மானிய பணிகள் ஒப்புதல், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முத்துராஜ் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com