என் மலர்

  நீங்கள் தேடியது "electrician"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெட்டப்பாக்கம் அருகே வாலிபர்களை தாக்கியதை தட்டிக்கேட்ட எலக்ட்ரீஷியனை கத்தியால் கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
  • இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்வம் மற்றும் மதிவாணனை கையாலும், மட்டையாளும் தாக்கினர்.

  புதுச்சேரி:

  நெட்டப்பாக்கம் அருகே வாலிபர்களை தாக்கியதை தட்டிக்கேட்ட எலக்ட்ரீஷியனை கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

  நெட்டப்பாக்கம் அருகே காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது32). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவரும், இவரது நண்பரான மதிவானன் என்பவரும் இயற்கை உபாதைக்காக அங்குள்ள மூகாம்பிகை நகர் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூர்யா, ராமு மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்களுடன் சேர்ந்து அந்த வழியாக வந்து கொண்டிருந்த அய்யப்பன் மற்றும் வடிவேல் ஆகிய இருவரையும் வழிமறித்து தாக்கினர்.

  இதனை கண்ட செல்வமும், மதிவாணனும் அந்த கும்பலிடம் தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்வம் மற்றும் மதிவாணனை கையாலும், மட்டையாளும் தாக்கினர்.

  அதோடு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வத்தை குத்தினர். மேலும் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வம் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

  பின்னர் இதுகுறித்து மடுகரை புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த லாரி ஒன்று மோகன் மீது மோதியது
  • விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  வெள்ளகோவில் :

  வெள்ளகோவில் அருகே உள்ள ரெட்டிவலசு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் மோகன் (வயது25) ,எலக்ட்ரீசியன். மோகன் நேற்று இரவு திருச்சி- கோவை ரோட்டில் வெள்ளகோவிலில் மூலனூர் ரோடு பிரிவு அருகே மோட்டர் சைக்கிளில் சென்றார்.

  அப்போது கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த லாரி ஒன்று மோகன் மீது மோதியது. உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் பெரியநாயகம். எலக்ட்ரீசியன்.
  • மர்ம கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் (வயது60). எலக்ட்ரீசியன்.

  எலக்ட்ரீசியன் கொலை

  இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  இந்நிலையில் மர்ம கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

  தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதில் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடையில் மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் இறந்துள்ளார். அந்த கடைக்கு பெரியநாயகம் வயரிங் வேலை செய்ததாக கூறப்படுகிறது.

  தனிப்படை விசாரணை

  எனவே அவர் சரியாக வயரிங் செய்யாததால் அவரது அலட்சியத்தால் வாலிபர் பலியானதாக கருதிய அவர்கள் பெரியநாயகத்தை பழிக்குப்பழியாக கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  இது தொடர்பான விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனலட்சுமி தனது கணவன் சரியான முறையில் வேலைக்கு சென்று சம்பாதிக்காமல் குடித்துவிட்டு ஊதாரித்தனம் செய்து வந்திருக்கிறார்.
  • மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டிற்கு வர மறுத்ததாக தெரிய வருகிறது.

  விழுப்புரம்:

  சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது35)இவர் சென்னையில் எலெக்ட்ரிசியன் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவரது மனைவி தனலட்சுமி தனது கணவன் யசரியான முறையில் வேலைக்கு சென்று சம்பாதிக்காமல் குடித்துவிட்டு ஊதாரித்தனம் செய்து வந்த நிலையில் ,தனது குழந்தைகள் சிவசங்கர் (14) முகேஷ்(14) சின்னா (9)ஆகியோருடன் தன் தாய் வீடான பாஞ்சாலத்தில் உள்ள ஆரோக்கியம் என்பரது வீட்டில் கடந்த 6 மாதங்களாக வந்து தங்கி வருவதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் தனலட்சுமி இவரது குழந்தைகளையும் திண்டிவனம் பகுதியில் படிக்க வைத்து வருகின்றார்.

  நேற்று முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மனைவி மற்றும் பிள்ளைகளை சென்னைக்கு அழைத்த போது அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வர மறுத்ததாக தெரிய வருகிறது. இதனால்மனம் உடைந்த முருகன் அங்குள்ள கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

  இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் இறந்து கிடந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசுபொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரோஷனை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரு அறையில் விக்னேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
  • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  பு.புளியம்பட்டி:

  ஈரோடு மாவட்டம் புஞ்ைச புளியம்பட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (35). இவரது மனைவி வானதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

  விக்னேஷ்குமார் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் விக்னேஷ்குமாரை வேலையில் இருந்து நீக்கியது. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார்.

  இந்நிலையில் நேற்று காலை தனது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட சென்ற விக்னேஷ் குமார் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி வானதி செங்குந்தபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.

  அங்கு வீட்டில் உள்ள ஒரு அறையில் விக்னேஷ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வேலை பறிபோன விரக்தியில் விக்னேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அதிகாலை வீட்டில் உள்ள இரும்பு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
  • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  பல்லடம் :

  பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன் சிவன்ராஜ்(வயது 38) எலக்ட்ரீசியன் .இவருக்கு திருமணமாகி சில வருடங்களில் மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவரது தங்கை வீட்டில் தங்கிகொண்டு வேலைக்கு சென்று வந்தார்.

  இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் உள்ள இரும்பு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் சிவன்ராஜ் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவன்ராைஜ பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது தந்தை கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பத்துக்கண்ணு சந்திப்பில் வாய்க்கால் கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்ததில் எலக்ட்ரீஷியன் பலியானார்.
  • ஒரு சிறிய பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விடூர் அணையில் இருந்து ஊசுடேரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் கட்டையில் மோதி கவிழ்ந்தது.

  புதுச்சேரி:

  பத்துக்கண்ணு சந்திப்பில் வாய்க்கால் கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்ததில் எலக்ட்ரீஷியன் பலியானார்.

  புதுவை ரெட்டியார்பா ளையம் மரியாள்நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் தமிழ்வேந்தன்(வயது35). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் வேலை விஷயமாக தமிழ்வேந்தன் மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் அருகே உள்ள ராமநாதபுரத்துக்கு சென்றுக்கொண்டிருந்தார். பத்துக்கண்ணு சந்திப்பில் ஒரு சிறிய பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விடூர் அணையில் இருந்து ஊசுடேரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் கட்டையில் மோதி கவிழ்ந்தது.

  இதில் தமிழ்வேந்தனுக்கு மார்பு எலும்பு நொறுங்கி போனது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழ்வேந்தன் பரிதாபமாக இறந்து போனார்.

  இதுகுறித்து அவரது தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோட்டார் சைக்கிள் விபத்தில் மில் தொழிலாளி இறந்தார்.
  • இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  ராஜபாளையம்

  ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் வெங்கடேஷ் (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.

  சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு வெங்கடேஷ் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில் உள்ள சத்திரப்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது திடீரென நாய் குறுக்கே சென்றது. இதில் நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து அவரது தந்தை பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சந்தோஷ்குமாரிடம் சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பு கடனாக பணம் பெற்றார்.
  • இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் மீட்டு அவினாசி மருத்துவமனையில் சேர்த்தனர்.

  அவினாசி :

  திருப்பூர் மாவட்டம் அவினாசி ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது29), எலக்ட்ரீசியன். இவரது மனைவி பகவதி .

  சந்தோஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் இணைந்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். சந்தோஷ்குமாரிடம் சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பு கடனாக பணம் பெற்றதாக தெரிகிறது. இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இன்று காலை ஏற்பட்ட தகராறில் சுரேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சந்தோஷ்குமாரின் இடது பக்க கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் மீட்டு அவினாசி மருத்துவமனையில் சேர்த்தனர்.

  பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து படுகாயம் அடைந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  கோவை:

  கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 77). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்.

  இவர் நேற்று காலை 5 மணியளவில் வழக்கம் போல பால் வாங்கி வந்து சமையல் அறைக்கு சென்றார்.

  அப்போது அங்கு சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு அறை முழுவதும் பரவி இருந்தது. இது தெரியாமல் சின்னராஜ் அறையில் இருந்த சுவிட்ச்சை போட்டார். கண் இமைக்கும் நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது.

  இதில் சின்னராஜ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சின்னராஜ் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடியில் இளம்பெண்ணை காதலித்து திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தது குறித்து மின்வாரிய ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி தெர்மல்நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது28). இவர் விருதுநகரில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் மணிமேகலை(25)க்கும் இடையே காதல் இருந்து வந்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

  இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மணிகண்டனை மணிமேகலை வற்புறுத்தினார். அதற்கு மணிகண்டன் மறுத்தார். இதையடுத்து மணிமேகலை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews