மேலப்பாளையத்தில் எலெக்ட்ரீசியன் தற்கொலை

நாராயண பெருமாள் மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களாக நாராயண பெருமாள் வீடு திறக்கப்படாமல் இருந்தது.
மேலப்பாளையத்தில் எலெக்ட்ரீசியன் தற்கொலை
Published on

நெல்லை:

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச் சந்தையை சேர்ந்தவர் நாராயண பெருமாள் (வயது25). எக்ட்ரீசியன். இவர் நெல்லை மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2 நாட்களாக இவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேக மடைந்த அக்கம் பக்கத்தினர் மேலப்பா ளையம் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது நாராயண பெருமாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொ ண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com