என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தூத்துக்குடியில் எலக்ட்ரீசியனை கொலை செய்தவர்கள் யார்? - தனிப்படை போலீசார் விசாரணை
  X

  பெரியநாயகம்

  தூத்துக்குடியில் எலக்ட்ரீசியனை கொலை செய்தவர்கள் யார்? - தனிப்படை போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் பெரியநாயகம். எலக்ட்ரீசியன்.
  • மர்ம கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் (வயது60). எலக்ட்ரீசியன்.

  எலக்ட்ரீசியன் கொலை

  இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  இந்நிலையில் மர்ம கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

  தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதில் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடையில் மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் இறந்துள்ளார். அந்த கடைக்கு பெரியநாயகம் வயரிங் வேலை செய்ததாக கூறப்படுகிறது.

  தனிப்படை விசாரணை

  எனவே அவர் சரியாக வயரிங் செய்யாததால் அவரது அலட்சியத்தால் வாலிபர் பலியானதாக கருதிய அவர்கள் பெரியநாயகத்தை பழிக்குப்பழியாக கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  இது தொடர்பான விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×