மோட்டார் சைக்கிள்கள் மோதல்; எலக்ட்ரீசியன் பலி

ஜேடர் பாளையத்தில் இருந்து சோழசிராமணி நோக்கி எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோபிநாத் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; எலக்ட்ரீசியன் பலி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம், குரும்பலமகாதேவி அருகே உள்ள எலந்தகுட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கோபிநாத் (வயது 29) எலக்ட்ரீசியன். இவர் தனது நண்பர் செல்வராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளையம் சென்றார்.

அப்போது ஜேடர் பாளையத்தில் இருந்து சோழசிராமணி நோக்கி எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது செல்வராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோபிநாத் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்வராஜ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை வேலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com