என் மலர்

  புதுச்சேரி

  எலக்ட்ரீஷியனுக்கு கத்தி குத்து
  X

  கோப்பு படம்.

  எலக்ட்ரீஷியனுக்கு கத்தி குத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெட்டப்பாக்கம் அருகே வாலிபர்களை தாக்கியதை தட்டிக்கேட்ட எலக்ட்ரீஷியனை கத்தியால் கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
  • இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்வம் மற்றும் மதிவாணனை கையாலும், மட்டையாளும் தாக்கினர்.

  புதுச்சேரி:

  நெட்டப்பாக்கம் அருகே வாலிபர்களை தாக்கியதை தட்டிக்கேட்ட எலக்ட்ரீஷியனை கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

  நெட்டப்பாக்கம் அருகே காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது32). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவரும், இவரது நண்பரான மதிவானன் என்பவரும் இயற்கை உபாதைக்காக அங்குள்ள மூகாம்பிகை நகர் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூர்யா, ராமு மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்களுடன் சேர்ந்து அந்த வழியாக வந்து கொண்டிருந்த அய்யப்பன் மற்றும் வடிவேல் ஆகிய இருவரையும் வழிமறித்து தாக்கினர்.

  இதனை கண்ட செல்வமும், மதிவாணனும் அந்த கும்பலிடம் தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்வம் மற்றும் மதிவாணனை கையாலும், மட்டையாளும் தாக்கினர்.

  அதோடு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வத்தை குத்தினர். மேலும் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வம் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

  பின்னர் இதுகுறித்து மடுகரை புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×