என் மலர்
உள்ளூர் செய்திகள்

எலக்ட்ரீசியன் தூக்குபோட்டு தற்கொலை
- ஒரு அறையில் விக்னேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்ைச புளியம்பட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (35). இவரது மனைவி வானதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
விக்னேஷ்குமார் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் விக்னேஷ்குமாரை வேலையில் இருந்து நீக்கியது. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை தனது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட சென்ற விக்னேஷ் குமார் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி வானதி செங்குந்தபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.
அங்கு வீட்டில் உள்ள ஒரு அறையில் விக்னேஷ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வேலை பறிபோன விரக்தியில் விக்னேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.