என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவையில் வேலை பார்த்த நிறுவனத்தில் ரூ.6.50 லட்சம் திருடிய எலக்ட்ரீசியன்
  X

  கோவையில் வேலை பார்த்த நிறுவனத்தில் ரூ.6.50 லட்சம் திருடிய எலக்ட்ரீசியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசார் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
  • துடியலூர் போலீசார் தலைமறைவாக இருந்த ஆல்பர்டை கைது செய்தனர்.

  கவுண்டம்பாளையம்,

  கோவை துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜசிம்மா (வயது 46). இவர் அந்த பகுதியில் பாத்திர கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.

  சம்பவத்தன்று இரவு இவர் தனது கம்பெனியை மூடும் போது ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கல்லா பெட்டியில் வைத்து விட்டு சென்றார். மறுநாள் கம்பெனிக்கு சென்றார். அப்போது கல்லா பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

  இது குறித்து ராஜசிம்மா துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

  பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதே கம்பெனியில் கடந்த 4 ஆண்டுகளாக எலக்ட்ரிசீயனாக வேலை பார்த்து வந்த கணபதியை சேர்ந்த ஆல்பர்ட் (29) என்பவர் திருடிச் சென்றது தெரிய வந்தது. அவர் கம்பெனியை மூடும் போது உள்ளே யாருக்கும் தெரியாமல் மறைந்து கொண்டார். பின்னர் கல்லா பெட்டியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து பைப் வழியாக தப்பிச் சென்றது தெரியவந்தது.

  இதனையடுத்து துடியலூர் போலீசார் தலைமறைவாக இருந்த ஆல்பர்டை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

  Next Story
  ×