என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு கிணற்றில் குதித்து  எலக்ட்ரீசியன் தற்கொலை
  X

  மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு கிணற்றில் குதித்து எலக்ட்ரீசியன் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனலட்சுமி தனது கணவன் சரியான முறையில் வேலைக்கு சென்று சம்பாதிக்காமல் குடித்துவிட்டு ஊதாரித்தனம் செய்து வந்திருக்கிறார்.
  • மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டிற்கு வர மறுத்ததாக தெரிய வருகிறது.

  விழுப்புரம்:

  சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது35)இவர் சென்னையில் எலெக்ட்ரிசியன் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவரது மனைவி தனலட்சுமி தனது கணவன் யசரியான முறையில் வேலைக்கு சென்று சம்பாதிக்காமல் குடித்துவிட்டு ஊதாரித்தனம் செய்து வந்த நிலையில் ,தனது குழந்தைகள் சிவசங்கர் (14) முகேஷ்(14) சின்னா (9)ஆகியோருடன் தன் தாய் வீடான பாஞ்சாலத்தில் உள்ள ஆரோக்கியம் என்பரது வீட்டில் கடந்த 6 மாதங்களாக வந்து தங்கி வருவதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் தனலட்சுமி இவரது குழந்தைகளையும் திண்டிவனம் பகுதியில் படிக்க வைத்து வருகின்றார்.

  நேற்று முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மனைவி மற்றும் பிள்ளைகளை சென்னைக்கு அழைத்த போது அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வர மறுத்ததாக தெரிய வருகிறது. இதனால்மனம் உடைந்த முருகன் அங்குள்ள கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

  இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் இறந்து கிடந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசுபொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரோஷனை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றார்கள்.

  Next Story
  ×