search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் ஒப்படைப்பு
    X

    உறுப்பினர் சேர்க்கை படிவங்களை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டபோது எடுத்த படம்.

    தூத்துக்குடியில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் ஒப்படைப்பு

    • ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
    • 44-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் புதிதாக 1,050 உறுப்பினர்களை அபிராமிநாதன் சேர்த்துள்ளார்.

    தூத்துக்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 100-வது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். அதில் மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று அக்கட்சியினருக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

    அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.விற்கு உட்பட்ட விளாத்திகுளம், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதனையடுத்து தூத்துக்குடி 35, 36, மற்றும் 44 ஆகிய வார்டுகளுக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், நியமிக்கப்பட்டிருந்தார். அவர் 44-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் புதிதாக 1,050 உறுப்பினர்களை சேர்த்துள்ளார். அதற்கான உறுப்பினர் படிவத்தை எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அமைச்சர் கீதாஜீவனிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், மேகநாதன், வட்ட செயலாளர் சுப்பையா, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×