search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • பைபாஸ் சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • கால்நடைகளை வீட்டில் கட்டி வைத்து வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் நெற்பயிர்கள் மற்றும் தானிய வகை பயிர்களை விளைவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை கால்நடைகள் சேதப்படுத்தி வந்தன.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை வயல் பகுதிகளில் மேய்ந்த கால்நடைகளை பிடித்து கொண்டு விவசாயிகள் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது விவசாயிகள் கால்நடைகள் விவசாய பயிர்களை சேதபடுத்தி வருகிறது.

    எனவே கால்நடைகளை வீட்டில் கட்டி போட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் தரப்பில் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

    பின்னர் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • சீருடை அணிந்த 118 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர்.
    • தொடர்ந்து, பந்தலடியில் ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது.

    முன்னதாக மன்னார்குடி காந்தி சாலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம், பந்தலடி, மகாமாரியம்மன் கோவில் தெரு, ருக்மணி பாளையம், தேரடி, பெரிய கடைவீதி வழியாக சென்று கீழராஜ வீதியில் முடிவடைகிறது.

    இதில் சீருடை அணிந்த 118 ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கள் அணிவகுத்து சென்றனர்.

    தொடர்ந்து, பந்தலடியில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் வி.ஜி.கே. மணி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன், வளரும் தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் பாலை.பட்டாபிராமன், ஆர்.எஸ்.எஸ். கோட்ட இணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றிபெற்றவர்களும் கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    பாரதிதாசன் பல்கலை க்கழக அளவிலான கல்லூரி களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் 26 கல்லூரிகள் கலந்து கொண்டன.

    இதில் மன்னார்குடி அடுத்த மேலவாசல் குமாரபுரத்தில் உள்ள சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இதில் மாணவிகள் அட்சயா, சவுமியா, சரண்யா ஆகியோர் பல்கலைக்கழக பெண்கள் கபடி அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் காளிதாஸ் கோப்பையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவனர் சதாசிவம், முதல்வர் நாகரெத்தினம், உடற்கல்வி இயக்குனர் சசிரேகா ஆகியோர் பாராட்டினர்.

    • தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், தாளாளருமான வெங்கட்ராஜூலு தலைமையிலும் நேதாஜி கல்வி குழுமத்தினுடைய இயக்குநனரும்), மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி தாளாளருமான விஜயசுந்தரம் முன்னிலையில் நேதாஜி கல்வி நிறுவனங்கள், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கி இணைந்து மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் எமதர்மராஜா (மற்றும்) சித்திரகுப்தன் வேடமணிந்து சாலை பயணத்தில் கவனமின்மையால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாகவும், தலைக்கவசம் உயிர்க்கவசம், சாலை விதிகளை கடைபிடிப்போம், படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம், இருசக்கர வாகனங்கள் செல்லும் பொழுது அவசியம் சீட் பெல்ட் அணிவோம், மதுஅருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்கவும் வேகத்தடையில் மெதுவாக செல்லவும், போன்ற வாசகம் அடங்கிய விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    விழிப்புணர்விற்கு சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கீழ்காவாதுகுடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தலைக்கோவன், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் வினோத் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும்நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டிய 1000 ஆயிரம் நபர்களுக்கு மரக்கன்று கள்வழ ங்கப்பட்டது.

    மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல்க ல்லூரியின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர்மை நேயத்தினை மனதில் கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    விழாவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமத்தினுடைய செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    இதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினுடைய முதல்வர் சிவகுருநாதன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் நிர்மல் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியினுடைய முதல்வர் ராமபிரபா, துணை முதல்வர்,துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகள் ஆசிரியர்களுடன் வாழ்க்கை நிகழ்வுகளை கலந்துரையாடினர்.
    • 20 ஆண்டுகள் கழித்து சந்தித்த இந்த நிகழ்வு எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்.

    நீடாமங்கலம்:

    நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் பள்ளிப்பருவ நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

    தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

    பின்னர், மாணவ- மாணவிகள் ஆசிரியர்களுடன் வாழ்க்கை நிகழ்வுகளை கலந்துரையாடினர்.

    பின்னர், அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

    தொடர்ந்து, அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

    இதுகுறித்து முன்னாள் மாணவர் அருண் கூறுகையில்:-

    ஒரே பள்ளியில் படித்த நாங்கள் அனைவரும் இன்று பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறோம்.

    அனைவரும் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என்ற எங்களது முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

    20 ஆண்டுகள் கழித்து சந்தித்த இந்த நிகழ்வு எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும் என்றார்.

    • கண் அறுவை சிகிச்சைக்காக 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • முடிவில் பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக செயலாளர் சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.

    சேர்மன் தணிகாசலம் முன்னிலை வகித்தார்.

    முகாமில் 90-க்கும் மேற்பட்ட பயனாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் கண் அறுவை சிகிச்சைக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டு கோவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இதில் உறுப்பினர்கள் அண்ணாத்துரை, செந்தில், இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.

    • சனிக்கிழமையை யொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக் சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ரவுடி தனத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுகூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் அலுவலத்தில் நடைபெற்றது.

    இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்களும், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ரௌடி தனத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் , கஞ்சா, பான்மசாலா, குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் எ, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்ட பட்டது.

    கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் திருத்துறைப்பூண்டி கழனியப்பன், குடவாசல் ராஜ், பேரளம் சுகுணா மற்றும் ஆலிவலம் காவல் சரகத்தில் ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்களை இரவு ரோந்தின் போது பிடித்து உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்ட ஆலிவலம் காவல் நிலைய காவலர்கள் சண்முகசுந்தரம் ராஜேஷ் ஆகிய 5 காவல் அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி மற்றும் வெகுமதி அளிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • கடந்த கஜா புயலின் போது கல்லூரி கட்டிடத்தின் முன்பக்க சுவர் மற்றும் கண்ணாடிகள் பாதிக்கப்பட்டது.
    • இதனை அப்பகுதி மக்கள் வெகுவாய் பாராட்டி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த தண்டலை ச்சேரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த கஜா புயலின் போது கல்லூரி கட்டிடத்தின் முன்பக்க சுவர் மற்றும் கண்ணாடிகள் பாதிக்கப்பட்டது.

    மேலும், சில ஆண்டுகளாக அந்த சுவர் சரிசெய்ய ப்படாமல் இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதனை அடுத்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயின் பரிந்துரையின் பேரில் உடனடியாக காவேரி படுகை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் வெகுவாய் பாராட்டி வருகின்றனர்.

    • மதுரை கண் ஆஸ்பத்திரிக்கு இலவசமாக செய்யகூடிய அறுவை சிகிச்சைக்காக கண்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    • விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம். கண்தானம் செய்வோம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் தேவதானம் மனற்படுகையை சேர்ந்த பெரியசாமி மனைவியும், கார்த்தி தாயாரும், கட்டிமேடு ஓவிய ஆசிரியர் நேரு சகோதரியுமான மணிமேகலை மரணம் அடைந்தார். முன்னதாக மரணத்திற்கு முன்பே அவர் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் கண்தானம் செய்ய விருப்பம் தெரிவித்து இருந்தார்.அதன்படி மணிமேகலை கண்களை தானமாக ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் பெற்று குடும்பத்தினரின் ஒப்புதலோடு மதுரை அரவிந்த கண் மருத்துவமனைக்கு இலவசமாக செய்யகூடிய அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    மறைந்தும் நான்கு நபரின் வாழ்வில் ஒளியேற்றி, உயிர் வாழ்கிற மணிமேகலை குடும்பத்திற்கு ராய் டிரஸ்ட் சார்பாக பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது.

    இது பற்றி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் கூறும் போது, தானங்களில் சிறந்தது கண்தானம். உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி கார்னியல் பிளைண்ட்னெஸ் எனப்படும் கருவிழி பாதிப்பானது பார்வையிழப்புக்குக் காரணமான விஷயங்களில் நான்காவது இடம் வகிப்பதாகத் தெரிகிறது.

    இறந்தவர்களின் கண்களை அடுத்த 6 - 8 மணி நேரத்துக்குள் எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. இறந்தவர்களின் கண்கள் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் அவற்றை பிரத்தியோக ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்து வருவார்கள். கருவிழி மாற்று அறுவைசிகிச்சை தேவைப் படுவோருக்கு அவற்றைப் பொருத்துவதன் மூலம் பார்வை கிடைக்கச் செய்ய முடியும்.

    கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில், பிரச்னைகள் ஏதும் இல்லாத பட்சத்தில் 5 முதல் 15 வருடங்கள் வரை அப்படியே இருக்கும். ஆனால், இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நபர், அடிக்கடி கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம். கண் தானம் செய்வோம். கண்கள் புதைப்பதற்கு அல்ல, விதைப்பதற்கு என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்றார்.

    • நெல் கொள்முதல் நிலையங்களில் 22310 டன் நெல்மூட்டைகள் பெறப்பட்டது.
    • சரக்கு இரயில் மூலம் 8000 டன் நெல்மூட்டைகள் அனுப்பபட்டது,

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20000 ஏக்கர் பரப்பளவிற்கு குறுவை சாகுபடி நடைபெற்று அறுவடைக்கு பின் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22310 டன் நெல்மூட்டைகள் பெறப்பட்டது.

    பின்னர் அந்த நெல்மூ ட்டைகள் திருத்துறைப்பூண்டியில் இருந்து சிவகங்கை புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரவை மில்களுக்கு சரக்கு இரயில் மூலம் 8000 டன் நெல்மூட்டைகளும், லாரி மூலம் 11000 டன் நெல்மூட்டைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் ஏற்றி அனுப்பபட்டுள்ளது.

    மேலும் மீதம் உள்ள நெல்மூட்டைகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுவதாக அதிகா ரிகள் துணை மேலாளர் ஏ. கண்ணன் தெரிவித்தார்.

    • துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    மன்னார்குடி 110 கி.வோ. துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்குடி நகரம், அசேஷம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, எம்பேத்தி, காரிக்கோட்டை, செருமங்கலம், மூவாநல்லூர், பருத்திகோட்டை, நாவல்பூண்டி, பாமணி, சித்தேரி, கூத்தநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×