என் மலர்

  நீங்கள் தேடியது "Observation"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன.
  • கடற்கரை ஓரமுள்ள 49 மீனவ கிராமங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள், மர்ம நபர்கள், சந்தேகப்படும்படியான படகுகள் ஏதேனும் வருகிறதா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

  கடலூர்:

  நாடு முழுவதும் 75 - ம் ஆண்டு சுதந்திர தின விழா அமுத பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு வீடுகளிலும் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசிய கொடி ஏற்றி 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை யொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, பண்ருட்டி, விருத்தாச்சலம் ஆகிய ஏழு உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார்கள் என 1900 போலீசார்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக மாவட்ட ம் முழுவதும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி கடற்கரை ஓரமுள்ள 49 மீனவ கிராமங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள், மர்ம நபர்கள், சந்தேகப்படும்படியான படகுகள் ஏதேனும் வருகிறதா? என்பதை போலீசார் கண்காணித்து வருவதோடு அங்குள்ள மக்களிடம் தகவல் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

  இது மட்டுமின்றி மக்கள் அதிகமாக கூடும் இடமான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பஸ் நிலையங்கள், ெரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் மாவட்டம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் எங்கேனும் வெடிகுண்டுகள் உள்ளதா? என்பதனை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளின் போலீசார் தீவிர சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தலைமை காவலர் முருகன் போலீஸ் வினோத்குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ரெயில் நிலையத்துக்கு வந்த ரெயில்களில் தீவிர சோதனை நடத்தி, பயணிகளின் உடமைகளை காண்காணித்தனர். ரெயில்வே தண்டவாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் சோதனை நடத்தினர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்திற்கு வந்த ரயில்கள் மற்றும் பயணிகளின் பார்சல்களை வெடிகுண்டு பரிசோதிக்கும் கருவிகளைக் கொண்டு போலீசார் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

  ×