என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meeting"

    சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    சிவகிரி:

    சிவகிரி மேலரத வீதி விஸ்வகர்மா மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிவகிரி நகர இடைக் கமிட்டியின் 34 -வது மாநாடு நடைபெற்றது.

    விவசாய சங்க வட்டார தலைவர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் முத்தரசன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் சிவகிரி நகர செயலாளராக பாலசுப்பிரமணியன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செம்படைத் தொண்டர்கள் பேரணி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து காந்திஜி கலையரங்கம் சென்று அடைந்தது.

    மாலை 6 மணியளவில் காந்திஜி கலையரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாக குழு உறுப்பினர் ராஜகோபால், நகர துணைச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் இசக்கி துரை, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பையா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிங்காரவேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நகர துணைச் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
    விளாத்திகுளத்தில் இன்று மாலை தி.மு.க. ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் திரளான கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார்.
    விளாத்திகுளம்:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் அருகே இன்று மாலை நடக்கிறது. பொதுக்கூட்டத்திற்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தலைமை தாங்குகிறார். முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் வரவேற்று பேசுகிறார்.

    மேயர் ஜெகன்பெரியசாமி, தலைைம செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ெஜயக்குமார், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன், கோவில்பட்டி முன்னாள் நகராட்சி தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர். மேலும் தலைமை கழக பேச்சாளர்கள் ஆரணிமாலா, முகவை ராமர், சரத்பாலா ஆகியோர் பேசுகின்றனர். முடிவில் பேரூர் செயலாளர் வேலுசாமி நன்றி கூறுகிறார். 

    இந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றிய, பேரூர் தி.மு.க. நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார்.
    ஆலங்குளத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது.
    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது.
    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஹரிஹர செல்வன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தூசி. செல்வராஜ், அமைப்புச் செயலர்கள் தங்கசாமி, மாவட்ட செயலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வழக்குரைஞர் அணி பொருளாளர் பால்ராஜ் வரவேற்றார்.   பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் சவுந்தர பாண்டியன், மாநில துணைத் தலைவர் லூர்து, வர்த்தக அணித் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

    கூட்டத்தில் நான்கு வழிச்சாலைப் பணியால் தற்போதுள்ள காமராஜர் சிலை  அகற்றப்பட உள்ளதால், வேறு புதிய இடத்தில் காமராஜர் சிலை நிறுவ அனுமதி அளிக்க வேண்டும், பனைத் தொழி லாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் வழக்குரைஞர் நெல்சன், அருணாசலம், ரமேஷ் உள்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.
    சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி அவசர கூட்டம் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ரவிசந்திரன், நகராட்சி பொறியாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தனர்.

     இதில் வருகிற ஆகஸ்ட் மாதம் சங்கரன் கோவிலில் நடைபெற உள்ள முக்கிய திருவிழாவான ஆடித்தபசு திருவிழாவை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை அடிப்படை வசதிகள் குறித்து உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தினர்.  கோரிக்கையை ஏற்ற சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

    இதில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர், நகராட்சி மேலாளர் மாரியம்மாள், தேர்தல் பிரிவு உதவியாளர் முருகன், கவுன்சிலர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
    நெல்லையில் 30-ந்தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம் நடைபெற உள்ளது.
    நெல்லை:-


    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் நடைபெறும்.

    அதன்படி வருகிற 30-ந்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தாங்கி மனுக்களை பெறுகிறார்.

    இதில் எண்ணை நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுத்தலைவர்எஸ்.எஸ்.பழனிமணிக்கம் எம்.பி. தலைமையில் ராமலிங்கம் எம்.பி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேசியதாவது:-

    தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிக்கும் பொருட்டு மாவட்டந்தோறும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் இந்த குழு கூட்டம் நடத்தப்பட்டது. இக்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்  உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

    இந்த ஆய்வில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா,  எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன்ஏ, டி.கே.ஜி.நீலமேகம், அன்பழகன், ஜவாஹிருல்லா, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி ஊராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. 

    ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ரியாஸ்கான், நகர் செயலாளர் ராஜபிரபு, அவை தலைவர் அய்யணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
     
    ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். 
    மாற்று கட்சியில் இணைந்த உறுப்பினர்களை நீக்கி புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கி கிளைகளை பலப்படுத்தி ஊராட்சியில் கட்சியின் கொடி ஏற்றுவது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் அமைச்சர் கீதா ஜுவன் தலைமையில் நாளை நடைபெறுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:- 

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்கு–ழுக்கூட்டம் நாளை (29-ந் தேதி) காலை 10மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடக்கிறது.

    கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் செல்வ ராஜ் தலைமை வகிக்கிறார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நான்(கீதாஜீவன்) சிறப்புரை ஆற்றுகிறேன்.

    கூட்டத்தில், ஜூன்-3-ந் தேதி கலைஞர் பிறந்தநாள் விழா குறித்தும், சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

    எனவே, கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றிடவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
    மருதாநல்லூரில் மனை உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட மருதாநல்லூரில் உள்ள கீரின்உட்ஸ் என்ற தனியார் மனை உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொது க்குழு கூட்டம் கீரின்உட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சங்கத்தின் 2022-23ம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்க ப்பட்டனர்.இதில் தலைவராக ஆனந்தன், செயலாளர் சரவணன், பொருளாளர் நரேந்திரன், இணை செயலாளர் ராமலிங்கம் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கீரின்உட்ஸ் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தார்.
    கீழப்பாவூரில் நாளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது என தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    வீ. கே. புதூர்:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன்  வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சண்முகையா தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் கீழப்பாவூரில் சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள எஸ்.கே.டி. திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

     இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட  உள்ளது. கூட்டத்தில் தி.மு.க.   நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள், சார்பு அணி நிர்வாகிகள்,மாவட்ட பிரதிநிதிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. 

    நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் 228 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த  மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் வட்டக்கிணறு நடைமேடை மண் சரிந்து புதையுண்டு இறந்தவரின் வாரிசுதாரர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5 ஆயிரத்து 341 மதிப்பீட்டில் சலவை பெட்டியும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் தையல் எந்திரங்களையும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் கலால்துறை சார்பில் நடத்தப்பட்ட மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி களில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணே சன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கீழப்பாவூரில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
    வீ.கே.புதூர்:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள எஸ்.கே.டி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    மாவட்ட தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் சண்முகையா  தலைமை தாங்கினார். இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

     முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞரின் 99-வது பிறந்தநாளை  சிறப்பாக கொண்டாடும் விதமாக தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்  ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சி பகுதிகள்  என அனைத்து பகுதிகளிலும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு செய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதில் மாவட்ட கலை இலக்கிய அணி பேரவை ஆலடி எழில்வாணன்,திமுக ஒன்றிய கவுன்சிலர்களான  சீனிதுரை,  சிவன்பாண்டியன், செல்லத்துரை, அன்பழகன், அழகு சுந்தரம், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன்,  யூனியன் தலைவர்கள் காவேரி,  திவ்யா மணிகண்டன், மாவட்ட விவசாய   அணி  துணை அமைப்பாளர் சங்கை சரவணன்,

    தொண்டர் அணி துணை அமைப்பாளர்  மேல பட்டமுடையார்புரம் ராமராஜ்  மற்றும்  தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தி.மு.க. இலக்கிய அணி தொண்டர் அணி என தி.மு.க.வில் உள்ள பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    ×