என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுத்தலைவர்எஸ்.எஸ்.பழனிமணிக்கம் எம்.பி. தலைமையில் ராமலிங்கம் எம்.பி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேசியதாவது:-
தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிக்கும் பொருட்டு மாவட்டந்தோறும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் இந்த குழு கூட்டம் நடத்தப்பட்டது. இக்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன்ஏ, டி.கே.ஜி.நீலமேகம், அன்பழகன், ஜவாஹிருல்லா, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story