என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
  X
  சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

  சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  சங்கரன்கோவில்:

  சங்கரன்கோவில் நகராட்சி அவசர கூட்டம் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ரவிசந்திரன், நகராட்சி பொறியாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தனர்.

   இதில் வருகிற ஆகஸ்ட் மாதம் சங்கரன் கோவிலில் நடைபெற உள்ள முக்கிய திருவிழாவான ஆடித்தபசு திருவிழாவை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

  கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை அடிப்படை வசதிகள் குறித்து உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தினர்.  கோரிக்கையை ஏற்ற சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

  இதில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர், நகராட்சி மேலாளர் மாரியம்மாள், தேர்தல் பிரிவு உதவியாளர் முருகன், கவுன்சிலர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×