என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் பேசிய போது எடுத்த படம்.
    X
    பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் பேசிய போது எடுத்த படம்.

    சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்

    சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    சிவகிரி:

    சிவகிரி மேலரத வீதி விஸ்வகர்மா மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிவகிரி நகர இடைக் கமிட்டியின் 34 -வது மாநாடு நடைபெற்றது.

    விவசாய சங்க வட்டார தலைவர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் முத்தரசன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் சிவகிரி நகர செயலாளராக பாலசுப்பிரமணியன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செம்படைத் தொண்டர்கள் பேரணி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து காந்திஜி கலையரங்கம் சென்று அடைந்தது.

    மாலை 6 மணியளவில் காந்திஜி கலையரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாக குழு உறுப்பினர் ராஜகோபால், நகர துணைச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் இசக்கி துரை, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பையா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிங்காரவேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நகர துணைச் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
    Next Story
    ×