ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சனிக்கிழமையை யொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக் சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com