தண்டலைச்சேரி அரசு கல்லூரி சீரமைப்பு பணி தீவிரம்

கடந்த கஜா புயலின் போது கல்லூரி கட்டிடத்தின் முன்பக்க சுவர் மற்றும் கண்ணாடிகள் பாதிக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் வெகுவாய் பாராட்டி வருகின்றனர்.
சுவற்றில வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள்.
சுவற்றில வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள்.
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அடுத்த தண்டலை ச்சேரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த கஜா புயலின் போது கல்லூரி கட்டிடத்தின் முன்பக்க சுவர் மற்றும் கண்ணாடிகள் பாதிக்கப்பட்டது.

மேலும், சில ஆண்டுகளாக அந்த சுவர் சரிசெய்ய ப்படாமல் இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதனை அடுத்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயின் பரிந்துரையின் பேரில் உடனடியாக காவேரி படுகை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் வெகுவாய் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com