search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம்
    X

    மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம்

    • ரவுடி தனத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுகூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் அலுவலத்தில் நடைபெற்றது.

    இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்களும், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ரௌடி தனத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் , கஞ்சா, பான்மசாலா, குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் எ, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்ட பட்டது.

    கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் திருத்துறைப்பூண்டி கழனியப்பன், குடவாசல் ராஜ், பேரளம் சுகுணா மற்றும் ஆலிவலம் காவல் சரகத்தில் ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்களை இரவு ரோந்தின் போது பிடித்து உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்ட ஆலிவலம் காவல் நிலைய காவலர்கள் சண்முகசுந்தரம் ராஜேஷ் ஆகிய 5 காவல் அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி மற்றும் வெகுமதி அளிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    Next Story
    ×