கபடி போட்டியில் கல்லூரி மாணவிகள் சாதனை

4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.வெற்றிபெற்றவர்களும் கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
வெற்றிபெற்ற மாணவிகள் பாராட்டப்பட்டனர்.
வெற்றிபெற்ற மாணவிகள் பாராட்டப்பட்டனர்.
Published on

மன்னார்குடி:

பாரதிதாசன் பல்கலை க்கழக அளவிலான கல்லூரி களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.

இதில் 26 கல்லூரிகள் கலந்து கொண்டன.

இதில் மன்னார்குடி அடுத்த மேலவாசல் குமாரபுரத்தில் உள்ள சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதில் மாணவிகள் அட்சயா, சவுமியா, சரண்யா ஆகியோர் பல்கலைக்கழக பெண்கள் கபடி அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் காளிதாஸ் கோப்பையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவனர் சதாசிவம், முதல்வர் நாகரெத்தினம், உடற்கல்வி இயக்குனர் சசிரேகா ஆகியோர் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com