search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் செய்திகள்"

    மத்திய அரசு மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகம் சார்பில் நடைபெற உள்ள பேஸ்-2 முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
    சேலம்:

    இந்திய அரசின் மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.சி.) சார்பில் தொழில் நுட்பம் சாராத மல்டி டாஸ்கிங் ஊழியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இதன் முதற்கட்ட பேஸ்-1 தேர்வு சமீபத்தில் கம்ப்யூட்டர் வழியாக  நடந்து முடிந்தது.  

     இதற்காக சேலம் சிவதாபுரம்  உள்பட பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற ஏராளமான இளம்பெண்கள், இளை ஞர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக  இந்த தேர்வு நடைபெற்றது. 

    இதனைத் தொடர்ந்து பேஸ்-1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில்  விண்ணப்பதாரர்கள்  எடுத்த  மதிப்பெண் அவர்களுடைய பதிவு எண், வரிசை எண்களுடன் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு பிரிவுக்கும் கட்- அப் மதிப்பெண் எவ்வளவு ? என அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஹால்டிக்கெட் வெளியீடு இந்த நிலையில் பேஸ்-1 முதன்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு  பேஸ்-2 முதன்மை தேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கெட் இ.எஸ்.ஐ.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்த இணையதளத்தில் பதிவு எண் அல்லது வரிசை எண் மற்றும் கடவுச் சொல் கொடுத்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடுத்த மாதம் 5-ந்தேதி வரை மட்டுமே ஹல்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியும்.
    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் திருவிழாவில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது.
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  இன்று காலையில் நடந்தது. 

    அப்போது அதே ஊரை சேர்ந்த கோபி (வயது 29) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சேலம் டவுன் கிச்சிப்பாளையம் குப்பைமேடு ஹவுசிங் போர்டு காலனியைச்சேர்ந்த  தங்கராஜ் (27) என்பவர் அந்த மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தார். இதைபார்த்த கோபி ஓடி வந்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு, தங்கராைஜ கைது செய்தனர்.
    திருவிழாவில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  இன்று காலையில் நடந்தது. 

    அப்போது அதே ஊரை சேர்ந்த கோபி (வயது 29) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சேலம் டவுன் கிச்சிப்பாளையம் குப்பைமேடு ஹவுசிங் போர்டு காலனியைச்சேர்ந்த  தங்கராஜ் (27) என்பவர் அந்த மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தார். இதைபார்த்த கோபி ஓடி வந்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு, தங்கராைஜ கைது செய்தனர்.
    சேலத்தில், நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் தேர்வு நடைபெறும்.
    சேலம்:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.  சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  182    மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட  மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகின்றன.

    அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதி வருகின்றனர். 

    சமூக அறிவியல் தேர்வு இதனைதொடர்ந்து  நாளை (30-ந்தேதி) சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.  மாணவ- மாணவிகள் சமூக அறிவியல் பாடத்தை  படிக்கும் விதமாக  கடந்த 27-ந்தேதி முதல்  இன்று வரை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    நாளை நடைபெற உள்ள சமூக அறிவியல் பாடத்துடன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைகின்றன.
    ஆன்லைன் வழியில் கிராம நிர்வாக அலுவலர் இடமாறுதல் நடைபெற உள்ளது.
    சேலம்:

    கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாறுதலை, ஆன்லைன் வழியே நடத்த வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று இந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியே இடமாறுதல் கேட்போரிடம் விண்ணப்பங்கள் பெற்று, உரிய ஆணை வழங்க, அரசு அனுமதித்துள்ளது.
    இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் சித்திக் கடிதம் எழுதி உள்ளார்.

    மாறுதல் கோரும் கிராம நிர்வாக அலுவலர்கள் 
    cra.tn.gov.in/vaotransfer என்ற இணையதளத்தில், ஜூன் 1 முதல் 15-ம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்தில் காரில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை, பணம் பறித்தனர்.
    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த களங்காணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தாயி (வயது 77).

    இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 35 வயது மதிக்கத்தக்க பெண், கந்தாயியிடம் முகவரி கேட்டு பேச்சு கொடுத்தார். 

    அப்போது அந்த பெண், நான் ஏற்கனவே உங்களை பார்த்த போது, நீங்கள் நகை அணிந்திருந்தீர்கள், அதைப் போலவே நானும் செய்ய வேண்டும். எனவே அந்த நகையை காண்பியுங்கள் என கேட்டுள்ளார்.
     
    இதையடுத்து கந்தாயி, வீட்டிற்குள் அந்த பெண்ணை அழைத்து சென்று, அலமாரியில் வைத்திருந்த நகையை எடுத்து, அந்த பெண்ணிடம் காண்பித்தார்.

    பின்னர் இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் தண்ணீர் கேட்டதால், வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த கந்தாயி, அந்த பெண் அங்கு இல்லாததால் திடுக்கிட்டார். 

    பின்னர், வீட்டிற்குள் சென்று அலமாரியில் பார்த்த போது, அங்கு வைத்திருந்த 4½ பவுன் செயின் மற்றும்  35 ஆயிரம் பணத்தை அந்த பெண் திருடிச்சென்றது தெரிந்தது.

    இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் மற்றும் நகையை திருடிச்சென்ற பெண் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குமாரபாளையத்தில் அதிகாலை ஆவின் பாக்கெட் பாலை திருடிய சிறுவன் சிக்கினான்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கே.ஓ.என். தியேட்டர் பகுதியில் ஆவின் பால் விற்பனை செய்து வருபவர் சதாசிவம் (வயது 65). இவர் பல வருடங்களாக பால் வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஆவின் ஊழியர்கள் நள்ளிரவில் பால் பாக்கெட் பெட்டிகளை ஒவ்வொரு முகவர் வீடு மற்றும் கடைகளின் முன்பு வைத்து செல்வது வழக்கம். அதன்படி  சதாசிவம் கடை முன்பும் ஆவின் பாக்கெட் பெட்டிகள் வைத்து விட்டு செல்வார்கள். 

    இந்த நிலையில் தொடர்ந்து பால் பாக்கெட் திருடப்பட்டு வந்தது. ஆவின் ஊழியர்கள் கடை முன்பு பெட்டிகளை வைத்து விட்டு சென்ற பிறகு மர்ம நபர், அங்கு வந்து பால்பாக்கெட்டுகளை திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    இது குறித்து அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பார்த்த போது ஒரு சிறுவன் அதிகாலை நேரத்தில் அங்கு வந்து  பால்  பாக்கெட்டுகளை திருடி செல்வதும், அந்த சிறுவன் நாராயண நகர் பகுதியை சேர்ந்தவன் என்பதும்  தெரியவந்தது.
    சேலத்தில் போலீசாருக்கு டிமிக்கி காட்டிய தக்காளி திருடனை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 26). இவர் பெருமாகவுண்டம்பட்டி, சஞ்சீவிராய பெருமாள் கோவில் அருகே காய்கறி கடை வைத்துள்ளார். இவருக்கு தக்காளி பார்சல் இறக்குபவர்கள் 26-ந்தேதி அதிகாலையில் 60 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக்காளி பெட்டி இறக்கி வைத்துள்ளனர். 

    இந்நிலையில் கடை உரிமையாளர் சங்கர், வழக்கம்போல் காலையில் கடையை திறக்க வந்த போது ஒரு கிரேடு தக்காளி பெட்டி மட்டுமே வெளியே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

    இதையடுத்து சிசிடிவி கேமராவை பார்த்த போது ஒருவர் மொபட்டில்  தக்காளி பெட்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது. அந்த நபர் , மொபட்டில் வந்து கடை முன்பு நின்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தக்காளியை கிரேடுடன் எடுத்து, கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. அந்த சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 

     இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சங்கர், புகார் கொடுத்தார். புகாரின் பேரில் எஸ். ஐ. ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து தக்காளி திருடனை தேடிவந்தனர். அந்த மர்ம நபர்   போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி காட்டி வந்தார்.இதனிடையே இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு போனதும், இதனால் சிறு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதும் தெரியவந்தது.

    சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்த வண்டி நம்பரை வைத்து விசாரணை செய்ததில், அவர் வெண்ணந்தூர் தங்கசாலை வீதி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்ராஜ் (வயது32) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே செவ்வாய்ப்ேபட்டை பகுதியில் ஆப்பிள் பெட்டி திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில்  வெளியே வந்த நிலையில், மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைப் பகுதியில் தக்காளி திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. 

    இதனை அடுத்து தக்காளி திருடிய சின்ராஜை போலீசார் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.
    ஆட்டையாம்பட்டி:
     
    சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் சாமி கோவிலில் சுக்கிர வாரம் தேய்பிறை பிரதோஷ தினத்தை ஒட்டி பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி கரபுரநாதர், நந்திகேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை பூஜையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. 

    தொடர்ந்து பிரதோஷ நாயனார் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கோவிலைவலம் வந்தனர். இதில் ஆட்டையாம்பட்டி, சேலம் குகை கொண்டலாம்பட்டி நெய்க்காரப்பட்டி அரியானூர், வீரபாண்டி, சூளைமேடு சமத்துவபுரம் உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    வீரகனூர், கெங்கவல்லியில் கன மழை பெய்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு   மழை பெய்தது.

    கன மழை  
    குறிப்பாக வீரகனூர், கெங்கவல்லி பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் வயல் வெளிகள் மற்றும் தாழ்வான பகுதி–களில் தண்ணீர் தேங்கியது.  கோடை காலத்தில்   பெய்த மழை   விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால்விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

    சேலம் மாநகரில் நேற்றிரவு 9  மணியளவில்  தொடங்கிய மழை  லேசான தூறலுடன்  நின்று போனது. இதனால் மழை வரும் என்று எ திர்பார்த்த  மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  ஆனாலும் குளிர்ந்த காற்று வீசியது . இதனால் பொது   மக்கள் நிம்மதியாக  தூங்க முடிந்தது.
      
    மாவட்டத்தில்  அதிக பட்சமாக வீரகனூரில் 48 மி.மீ.  மழை பெய்துள்ளது. கெங்கல்லி 15, தம்மம்பட்டி 10, பெத்தநாயக்கன்பாளையம் 5, சங்ககிரி 1.2, ஆத்தூர், சேலத்தில் 1 மி.மீ.  என மாவட்டம் முழுவதும் 81.2 மி.மீ. மழை பெய்தது. இன்று காைல மாவட்டம் முழுவதும் வெயில அடித்த படி இருந்தது.
    ஏற்காடு கோடை விழாவுக்கு சென்ற மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த கோடை விழாவிற்காக தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். 

    இந்த நிலையில் மகுடஞ்சாவடியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் நண்பர் நியாசுடன் ஏற்காடு கோடை விழாவிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவாக–வுண்டனூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ஏற்காடு நோக்கிச் சென்றனர்.

    சேலம் மாவட்ட கலெக்டர் பங்களா அருகே வேன் வரும்போது திடீரென கரும்புகை எழுந்தது. இதை அறிந்த டிரைவரான சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் மாருதி வேனை ஓரமாக நிறுத்தி விட்டு வெளியே வந்துவிட்டனர். இதனை அடுத்து கார் மளமளவென தீ பிடித்து தீப்பற்றி எரிந்தது.

    இதனால் சாலையில் சென்றவர்கள்  இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மற்றும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

    எனினும் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தாரமங்கலம் அருகே விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலியானார்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே கடந்த 26-ந்தேதி இரவு 2 மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த கொத்தனார் சந்திரசேகரன் (40) என்பவர் பலியானார். 

    இந்த விபத்தில்  மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன்  மகன் சிவா (வயது21) என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடனே அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×