search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் செய்திகள்"

    ஏற்காடு கோடைவிழா மலர்கண்காட்சியில் 5 லட்சம் பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 2 வருடங்களாக கொரானா ஊரடங்கு காரணமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்தப்பட்டால் இருந்தது. இந்த ஆண்டு கடந்த 25-ந் தேதி 45-வது கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

    இங்குள்ள அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி காட்சி படுத்தப்பட்டுள்ளுது. இதற்காக இங்குள்ள கண்ணாடி மாளிகையில் வண்ணமிகு மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அண்ணா பூங்காவிலும் ஏறி பூங்காவிலும் உள்ள செயற்கை நீரூற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கோடை விழா மலர் கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மேட்டூர் டேம், மகளிருக்கான இலவச பேருந்து .விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டி, குழந்தைகளை குதூகலமாக சின்-சான் பொம்மை, வள்ளுவர் கோட்டம், போன்ற உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    சுற்றுலா பயணிகள் அமர 2 குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செயது மகிழ்கின்றனர்.

    மேலும் சுற்றுலா குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கிறார்கள்.கோடை விழா மலர் கண்காட்சிக்காக கூடுதலாக பேருந்துகளை மாவட்ட நிர்வாகம் இயக்கியுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக இன்றும் நாளையும் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒரு வழி பாதையாக செய்யப்பட்டுள்ளது. . 4-வது நாளான இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
    தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 40).  கட்டிட தொழிலாளி

    இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு ஓமலூரில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.  

    சிக்கம்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது எதிரே வந்த மற்றோரு மோட்டார் சைக்கிளில் வந்த பெரியாகடம்பட்டியை சேர்ந்த சிவா (21) என்பவர்  பலமாக மோதியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர் .அவர்களை   மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

     வழியிலேயே சந்திரசேகரன்  பரிதாபமாக இறந்தார்.  சிவா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி சந்திரசேகரனின் மனைவி உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் டெம்போ டிரைவரை மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
    சேலம்:

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் 5 பேர் நேற்றிரவு ஒகேனக்கல்லுக்கு காரில் புறப்பட்டனர். அந்த கார் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
    அப் போது முன்னால் சென்று கொண்டிருந்த டெம்போ கார் மீது உரசியதாக கூறி அதனை வழி மறித்தனர். 

    பின்னர் காரில் இருந்த 5 பேர் கும்பல் டெம்போ டிரைவரிடம் ரூ.10 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறிய நிலையில் அவரிடம் இருந்து 1000 ரூபாயை பறித்து விட்டு சேலம் நோக்கி காரில் வந்தனர்.

    இதனையறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தெரிவித்தனர். சீலநாயக்கன்பட்டியில் காரை போலிசார் மறித்த போது கார் அங்கிருந்த மின்னல் வேகத்தில் பெங்களுரு சாலையில் சென்றது. இதையடுத்து போலீசார் காரை துரத்தி சென்றனர். 

    மேலும் மைக்கிலும் அறிவித்து ரோந்து போலீசாரை உசார்படுத்தினர்.  ஆனால் அதற்குள்  கார் குரங்குசாவடியை தாண்டி சென்றது. பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு சந்திற்குள்  காரை  ஒதுக்கி நிறுத்தி வைத்தனர். அததனை கவனித்த ரோந்து போலீசார் போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர். 

    இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காரை மடக்கி பிடித்து காருக்குள்  இருந்த 5 பேரையும் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் புதுச்சத்திரம்  போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த கும்பலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வாழப்பாடி அருகே கார் விபத்தில் சேலம் புரோகிதர் பலியானார்
    வாழப்பாடி:

    சேலம் அருகே நிலவாரபட்டி பகுதியை சேர்ந்தவர் புரோகிதர் பாஸ்கரன் (56). இவரது மனைவி சாரதாம்பாள் (50).  இவரது உறவினர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி காரில் நேற்று இரவு சென்றனர். 

    சென்னையை சேர்ந்த சங்கர் என்பவர் காரை ஓட்டினார். கார் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை  அப்பகுதியினர் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  வழியிலேயே பாஸ்கரன்  பரிதாபமாக உயிரிழந்தார். 

    சாரதாம்பாள், பாலசுப்பிரமணி, கார் டிரைவர் சங்கர் உள்ளிட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பாஸ்கரன் உறவினர் ராஜாராமன் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சேலம் வழியாக சென்ற தன்பாத் ரெயிலில் 4 கிலோ கஞ்சா சிக்கியது.
    சேலம்:

    சேலம் வழியாக சென்ற தன்பாத் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் ரெயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    சங்ககிரி-ஆனங்கூர் இடையே வந்தபோது ரெயில் கழிவறையில் ஒரு பை கிடப்பதை பார்த்தனர். அதை சோதனை செய்தபோது அந்த பையில் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கிடந்தன.  

    போலீசார் அதை கைப்பற்றி கஞ்சா கடத்தி வந்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அயோத்தியாப்பட்டணத்தில் உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை

    அயோத்தியாப்பட்டணத்தில் உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    வாலிபரிடம் செல்போன் விற்பதாக கூறி ஆன்லைனில் மர்ம நபர்கள் செய்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து ரூ.39 ஆயிரம் மீட்டு வாலிபரிடம் ஒப்படைத்தனர்
    சேலம்:

    சேலம் போர்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்த நவீன் குமார். இவர் இணையதளத்தில்  குறைந்த விலையில் செல்போன் விற்பனை செய்வதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசிய நபர் ரூ.39 ஆயிரத்து 500 முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று சொன்னார். அதை நம்பி நவீன்குமார் போனில் பேசியவர் கூறிய வங்கி கணக்கிற்கு கூகுல்பே மூலம் ரூ.39 ஆயிரத்து 500  அனுப்பி வைத்தார்.

    ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் செல்போன் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தனது பணத்தை மீட்டுத் தருமாறு நவீன் குமார் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். 

    இதுகுறித்து  சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது அதில் நவீன் குமார் அனுப்பிய பணம் மும்பையில் உள்ள ஒரு தனியார் வங்கி கணக்கிற்கும் பஞ்சாப்பில் உள்ள தனியார் வங்கி கணக்கிற்கும் சென்றிருப்பது தெரியவந்தது. 

    மோசடி செய்யப்பட்ட பணத்தை நவீன்குமாருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிகளின் லீகல் டிபார்ட்மெண்டுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நவீன்குமாரிடம் இருந்து மோசடியாக பெறப்பட்ட  ரூ.39 ஆயிரம் 500 முழுவதும் அவரது வங்கி கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டது. 

    மேலும் இது போன்ற குறைந்த விலையில் செல்போன், 2, 4  சக்கர வாகனங்கள் மற்றும் இதர பொருட்கள் விற்பதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம். வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவதை நம்பி தங்களுடைய வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் ஓ.டி.பி.க்களை யாரிடமும் பகிர வேண்டாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம், குறைந்த வட்டியில் கடன் என்ற வரும் போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். 

    அவ்வாறு யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930-க்கு விரைவாக தொடர்பு கொள்ளும் பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டுத் தர இயலும் என  சேலம் சைபர் கிரைம் டி.எஸ்.பி. முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    ஏற்காடு கோடைவிழாவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அண்ணாபூங்காவில் மலர்களை கண்டு ரசித்தனர்.
    ஏற்காடு:

    ஏற்காட்டில் 45-வது  கோடை விழா நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான இன்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கோடை விழாவை காண வருகை தந்தனர். அண்ணா பூங்காவில் அமைந்துள்ள சுமார் 5 லட்சம் மலர்களை கண்டுகளித்தனர்.

    மலர்களால் வடிவமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி, சின்-சான் பொம்மை, வள்ளுவர் கோட்டம், பேருந்து போன்றவைகளுக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

    தமிழ்நாடு அரசு சார்பாக அமைக்கப்பட்ட துறை சார்ந்த விளக்க கூடம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ஊராட்சிகள் சார்பாக அமைக்கபட்டுள்ள காட்சி கூடத்தில் கிராம சபா எவ்வாறு மக்களுக்கு பயன் அளிக்கிறது என்பதை விளக்கும் விதமாக காட்சி அமைக்கபப்ட்டு உள்ளது. 

    மேலும் இந்திய அஞ்சல் துறை சார்பாக அமைக்கப்பட்ட விளக்க கூடத்தில் சிறு சேமிப்பு, ஆயுள் காப்பீடு, புதிய வகை ஸ்டாம்ப் அஞ்சல் துறையில் மக்கள் எவ்வாறு சேமிப்பது குறித்து விளக்கம் உள்ளது. இதே போல் சுகாதார துறை, ஆவின், காதி, பொன்னி, சத்துணவு போன்ற விளக்க கூட்டம் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. 

    இன்று காலை சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கான விளையாட்டு போட்டியும்,  இளஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பாக இளைஞர்களுககான விளையாட்டு போட்டிகள்  மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    மனைவியை அடித்து உதைத்த கணவன், கள்ளக்காதலி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள வனிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(வயது37) இவரது மனைவி ரேவதி (27).  சுந்தரம் டெம்போ டிரைவராக வேலை செய்து வருகிறார் .

    இந்நிலையில் சுந்தரத்திற்கு பவளத்தானுர் பகுதியில் பழக்கடை வைத்து இருக்கும் கண்ணம்மா (35) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சுந்தரம் கண்ணம்மாளின் பழக்க–டையில் இருந்து கொண்டு தனது வீட்டிற்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார் .

    இந்நிலையில் ரேவதி கணவர் சுந்தரத்தை பல முறை கண்டித்துள்ளார்.இருந்தும் சுந்தரம், கண்ணம்மாள் இருவருக்கும் இடையே பழக்கம் நீடித்து வந்துள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த ரேவதி  கணவரை தேடி பவளத்தா–னுர் பகுதிக்கு வந்துள்ளார்.

    அப்போது சுந்தரமும் ,கண்ணம்மாளும் பழக்கடை–யில் ஒன்றாக வியாபாரம் செய்துகொண்டு இருந்ததை பார்த்த ரேவதி இருவரையும் கண்டித்துள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த கணவர் சுந்தரமும் கண்ணம்மாளும் இங்கு எதற்கு வந்தாய் என்றுகூறி ரேவதியை அடித்து உதைத்துள்ளனர்.

    இதுபற்றி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் சுந்தரம் மற்றும் கண்ணம்மாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    முத்துமலை முருகன் கோவிலில் மண்டல பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திர கவுண்டன்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையுடன்  முத்துமலை முருகன்  கோவில் கட்டப்பட்டு  கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

    அதன் தொடர்ச்சியாக தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. கும்பாபிஷேகத்தின் இறுதிநாளான 48 நாள் மண்டல பூஜை நிறைவு வழிபாடு நடைபெற்றது.

    இதையொட்டி காலை சிறப்பு யாகம் செய்யப்பட்டு விநாயகர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம்,   மலர்களால் அலங்காரம் நடைபெற்றது. 

    பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவையொட்டி  அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    பக்தர்கள் வசதிக்காக ஆறுபடை வீட்டில் உள்ள முருகப் பெருமானின் உருவங்கள்  அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.
    வீராணம் அருகே வயலில் மர்மமாக இறந்து கிடந்த ஆடுகள்
    சேலம்:

    சேலம்  மாவட்டம் வீராணம் அருகே உள்ள வளையகாரனூர்  பகுதியை  சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான ஆடுகளை நேற்று    அருகில் உள்ள ஒரு வயிலில்  கட்டி போட்டிருந்தார். 

    மாலையில்  இதில் 3 ஆடுகள்  மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை  பார்த்த சீனிவாசன் கதறினார். பின்னர் சம்பவம்  குறித்து வீராணம் போலீசில் புகார் கொடுத்தார். 

    அதன் பேரில்  விச செடிகளை  தின்றதால் ஆடுகள்  இறந்ததா? அல்லது யாராவது விஷம் வைத்து கொன்றார்களா?      என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    சேலம் ரெயிலில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை கேரள மாநிலம் நோக்கி சென்ற தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. 

    அந்த ரெயிலில் சேலம் ெரயில்வே பாதுகாப்பு படையினர் கஞ்சா கடத்தலை தடுக்க சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் பெரிய 
    பை ஒன்று சந்தேகத்திற்கிடமாக இருந்தது. 

    அந்த பையை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த பையை சோதனை செய்த போது, அதில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

    அதனை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்ற விவரம் தெரியவில்லை.  சேலம் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ெரயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

    மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×