என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
திருவிழாவில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது
சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் திருவிழாவில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலையில் நடந்தது.
அப்போது அதே ஊரை சேர்ந்த கோபி (வயது 29) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சேலம் டவுன் கிச்சிப்பாளையம் குப்பைமேடு ஹவுசிங் போர்டு காலனியைச்சேர்ந்த தங்கராஜ் (27) என்பவர் அந்த மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தார். இதைபார்த்த கோபி ஓடி வந்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு, தங்கராைஜ கைது செய்தனர்.
Next Story






