என் மலர்
நீங்கள் தேடியது "tag 94468"
சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று கிலோவுக்கு 35 ரூபாய் குறைந்துள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் இன்று ஒரு கிலோ தக்காளி 65 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பண்ணை பசுமை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி 63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவை:
கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக வருகிறது.
இதுதவிர கிருஷ்ணகிரி, மேச்சேரி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும், மகராஷ்டிரா மாநிலம் நாசிக், கோலார் பகுதிகளில் இருந்தும் அதிகளவிலான தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் மற்றும் சில்லரை விற்பனை கடைகளுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது.
தக்காளி வரத்து குறைவு காரணமாக கடைகளிலும் விலையானது ஏற்றத்துடனேயே காணப்பட்டது. ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையாகி வந்தது.
தற்போது மழை குறைந்ததாலும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து நேற்று முதல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலையும் சரிய தொடங்கியது.
100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி 60 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரைக்கு விற்பனையாகி வருகிறது.
கோவை டி.கே.மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.60க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.80க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக ரூ.100க்கும் அதிகமாக விற்பனையாகி வந்த தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது இல்லத்தரசிகள் மற்றும் உணவகம் நடத்துபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் தக்காளி தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி தினசரி மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. நேற்று முன்தினம் 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி ரூ.1,250 வரை விற்பனையாகி வந்தது. நேற்று வரத்து அதிகரித்ததால் ரூ.250 சரிந்து ஒரு டிப்பர் முதல் தர தக்காளி ரூ.1000த்திற்கும், இரண்டாம், மூன்றாம் தர தக்காளி 650 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்து அதிகமாக உள்ளதால் வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி தினசரி விற்பனைக்கு வருகிறது.
பரவலாக பெய்த தொடர் மழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்குள்ள வியாபாரிகளும் கோயம்பேடு வியாபாரிகள் கொள்முதல் செய்து வரும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலேயே அதிகளவில் தக்காளியை கொள்முதல் செய்தனர். இதன் காரணமாக திடீரென தக்காளியின் தேவை 2 மடங்காக அதிகரித்தது.
கோயம்பேடு சந்தைக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்து பாதியாக குறைய தொடங்கியதால் அதன் விலையும் படிப்படியாக அதிகரித்தது. கடந்த மாத தொடக்கத்தில் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்கப்பட்ட நிலையில் உச்சபட்சமாக 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.120- யை கடந்து விற்கப்பட்டது.
இந்தநிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ60-க்கு விற்கப்படுகிறது. தக்காளியின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 39லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் பரவலாக பெய்த மழையால் வரத்து குறைந்து தக்காளி விலை அதிகரித்தது.
தற்போது மழை குறைந்துள்ளதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி விலை குறையத் தொடங்கி இருக்கிறது. வரும் நாட்களில் தக்காளியின் வரத்து அதிகரித்து விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு பெட்டி தக்காளி (14கிலோ) ரூ1100-க்கு விற்ற நிலையில் இன்று விலை குறைந்து ரூ800-க்கு விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கயம்:
காங்கயம் நகரில் தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, திங்கட்கிழமை தோறும் கூடும் வாரச்சந்தை என இருந்தாலும், வாரந்தோறும் வியாழக்கிழமைதோறும் காய்கறிக்கென தனியாக மார்கெட்டும் கூடுகிறது. இங்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்குதியில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பயிர் செய்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
மேலும் வெளியூரை சேர்ந்த வியாபாரிகளும் வெங்காயம், தக்காளி போன்றவற்றை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். இவர்களிடமிருந்து சிறு வியாபாரிகள் வாங்கி அதே வளாகத்தில் சிறு கூடாரங்கள் அமைத்து பொதுமக்களிடம் விற்பனை செய்வது வழக்கம்.
இவ்வாறு 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை நடந்து வருகிறது. காங்கயம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என பலரும் இங்கு வந்து காய்கறிகள் வாங்கி செல்வார்கள்.
நேற்று முன்தினம் கூடிய இந்த காய்கறி மார்க்கெட்டில் முதல் தரமான தக்காளி ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனையானது. இரண்டாம் தரமான தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளியின் விலை சென்ற வாரத்தை காட்டிலும் ரூ.30 குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் சற்றே மன ஆறுதலுடன் தக்காளியை வாங்கிச் சென்றனர். மேலும் வரும் வாரங்களில் தக்காளியின் விலை இன்னமும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் ஒரு கிேலா தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோவுக்கு ரூ.30 குறைந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில்கி ணற்றுப்பாசனத்துக்கு பிரதானமாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை சீசனுக்கு பிறகு தக்காளி வழக்கத்தை விட கூடுதல் பரப்பில் சாகுபடியானது.இதனால் இந்தாண்டு துவக்கத்தில் தக்காளி விலை சரிந்து விவசாயிகள் பாதித்தனர்.
எனவே மீண்டும் இச்சாகுபடி செய்ய தயக்கம் காட்டினர். மேலும் கோடை கால மழை உள்ளிட்ட காரணங்களால் நடப்பு சீசனில், தக்காளி உற்பத்தி பாதித்துள்ளது.எனவே உடுமலை சந்தைக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரிக்க துவங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி தரத்தின் அடிப்படையில் 600-800 ரூபாய் வரை விற்பனையானது. பிற மாவட்டங்களில், தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால் உடுமலை சந்தைக்கு அப்பகுதி வியாபாரிகள் வருகை கூடுதலாக இருந்தது.
எனவே ஏலத்தில் போட்டி அதிகரித்து விலை ஒரே நாளில் பெட்டிக்கு 100 ரூபாய் வரை கூடுதலாக விற்பனையானது.தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கினால்வரத்து முற்றிலுமாக குறைந்து விலை பல மடங்கு உயரும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.
உடுமலை:
உடுமலை பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள் மற்றும் கிணற்றுப்பாசனம், ஆழ்குழாய்க் கிணற்று நீரை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வரத்து, நீர் இருப்பு கேற்றவாறு நீண்ட கால பயிர்கள், காய்கறிகள், கீரை வகைகள், தானியங்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
அன்றாட வருமானம் ஈட்டும் சூழல் நிலவுவதால் விவசாயிகள் குறைந்த நாட்களில் நிறைவான லாபம் தரக்கூடிய தக்காளியை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தக்காளி விலை உச்சத்தைத் தொட்டதை தொடர்ந்து விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் தக்காளி நாற்றுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் தக்காளி விலை உயரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து இன்று 430 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.
நள்ளிரவில் விறுவிறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை அதிகாலையில் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்ததால் மந்தமாகி போனது.
மழை பொழிவு காரணமாக தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து பாதியாக குறைந்ததால் அதன் விலை திடீரென பல மடங்கு அதிகரித்தது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ கடந்து விற்கப்பட்டது. கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று முன்தினம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் தக்காளியின் விலை இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.50-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும், வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.70 வரையிலும் விற்கப்படுகிறது.
மொத்த விற்பனையில் இன்று பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50-க்கும், உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.20-க்கும், ஊட்டி கேரட் கிலோ ரூ.35-க்கும், வெண்டைக்காய் கிலோ 25-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.35-க்கும், முட்டைகோஸ் ரூ.30-க்கும் விற்கப்படுகிறது.
காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-
தக்காளி-ரூ.50, நாசிக் வெங்காயம்-ரூ.20, சின்ன வெங்காயம்-ரூ.35, ஆக்ரா உருளைக்கிழங்கு-ரூ.23, கோலார் உருளைக்கிழங்கு-ரூ.30, உஜாலா கத்தரிக்காய்-ரூ.20, கத்தரிக்காய்-ரூ.18, வெண்டைக்காய்-ரூ.25, அவரைக்காய்-ரூ.35, ஊட்டி கேரட்-ரூ.35, ஊட்டி பீட்ரூட்-ரூ.40, பீன்ஸ்-ரூ.50, முள்ளங்கி-ரூ.20, சுரக்காய்-ரூ.15, மாங்காய்-ரூ.28, கோவக்காய்-ரூ.15, முருங்கைக்காய்-ரூ.50, புடலங்காய்-15, முட்டைகோஸ்-ரூ.30, சோளம்-ரூ.15, வெள்ளரிக்காய்-ரூ.15, நூக்கல்-ரூ20, காலி பிளவர் ஒன்று-ரூ.15, பச்சை மிளகாய்-30, இஞ்சி-ரூ.28.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவு தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.
தற்போது பெய்து வரும் பலத்தமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து பாதியாக குறைந்து.
இதனால் தக்காளி விலை திடீரென அதிகரித்தது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரையிலும், வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
பின்னர் கனமழை இல்லாததால் கடந்த 3 நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது . இதனால் தக்காளி விலை ரூ.50 ஆக குறைந்தது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து இருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்யத்தொடங்கி இருப்பதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இன்று குறைந்தது. 51 லாரிகளில் மட்டும் தக்காளி விற்பனைக்கு வந்தது. சாதாரண நாட்களில் 60 முதல் 70 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.
தக்காளி வரத்து குறைந்ததால் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.60-க்கும், சில்லரை கடைகளில் கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மீண்டும் கவலை அடைந்து உள்ளனர். மழை முடியும் வரை தக்காளி விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-
தமிழகத்தில் தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் பழனி, ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட வியாபாரிகள் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக தக்காளி தேவை அதிகரித்து உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் மீண்டும் 2 நாட்களாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக கோவையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து பசுமை பண்ணை கடைகளில் கிலோ ரூ.75-க்கு தக்காளி விற்பனை செய்ய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவை மார்க்கெட்டுகளுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.100 முதல் ரூ.120-க்கு விற்பனையான தக்காளி நேற்று கிலோ ரூ.60க்கு விற்பனையானது. இன்று காலை கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் நாட்டு தக்காளி ரூ.50க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.50க்கும் விற்பனையாகி வருகிறது. 2 நாட்களாக விலை உயர்ந்து காணப்பட்ட தக்காளியின் விலை இன்று குறைந்ததால் மக்களும் நிம்மதி அடைந்தனர். அவர்கள் மார்க்கெட்டுகளில் வழக்கம் போல் தக்காளி மற்ற காய்கறிகளை வாங்கி சென்றனர்.
இதேபோல் கோவை உழவர்சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.58க்கு விற்பனையாகி வருகிறது. ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் தக்காளி சீசன் தொடங்கியுள்ளதால் வருகிற நாட்களில் தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இதுதவிர வேலூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.100-யை தாண்டி விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து காட்பாடி காங்கேயநல்லூர் ரோட்டில் உள்ள பசுமை பண்ணை அங்காடியில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பசுமை பண்ணை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி ரூ. 69-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
வேலூர் மார்க்கெட்டிற்கு இன்று தக்காளி வரத்து அதிகமானதால் விலை ஓரளவு குறைந்தது. கிலோ ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.60 வரை விற்பனையானது.
நேதாஜி மார்க்கெட்டில் (ஒருகிலோவிற்கு) கத்தரி ரூ.100, வெண்டைக்காய் ரூ.100, கேரட் ரூ.60, பீன்ஸ் ரூ.70 என விற்பனை செய்யப்படுகிறது.







