search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தென்மேற்கு பருவ மழை சீசனால் தக்காளி விலை பல மடங்கு உயர வாய்ப்பு

    ஏலத்தில் போட்டி அதிகரித்து விலை ஒரே நாளில் பெட்டிக்கு 100 ரூபாய் வரை கூடுதலாக விற்பனையானது.

    காங்கயம்:

    காங்கயம் நகரில் தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, திங்கட்கிழமை தோறும் கூடும் வாரச்சந்தை என இருந்தாலும், வாரந்தோறும் வியாழக்கிழமைதோறும் காய்கறிக்கென தனியாக மார்கெட்டும் கூடுகிறது. இங்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்குதியில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பயிர் செய்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

    மேலும் வெளியூரை சேர்ந்த வியாபாரிகளும் வெங்காயம், தக்காளி போன்றவற்றை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். இவர்களிடமிருந்து சிறு வியாபாரிகள் வாங்கி அதே வளாகத்தில் சிறு கூடாரங்கள் அமைத்து பொதுமக்களிடம் விற்பனை செய்வது வழக்கம்.

    இவ்வாறு 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை நடந்து வருகிறது. காங்கயம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என பலரும் இங்கு வந்து காய்கறிகள் வாங்கி செல்வார்கள்.

    நேற்று முன்தினம் கூடிய இந்த காய்கறி மார்க்கெட்டில் முதல் தரமான தக்காளி ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனையானது. இரண்டாம் தரமான தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தக்காளியின் விலை சென்ற வாரத்தை காட்டிலும் ரூ.30 குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் சற்றே மன ஆறுதலுடன் தக்காளியை வாங்கிச் சென்றனர். மேலும் வரும் வாரங்களில் தக்காளியின் விலை இன்னமும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த வாரம் ஒரு கிேலா தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோவுக்கு ரூ.30 குறைந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    உடுமலை சுற்றுப்பகுதிகளில்கி ணற்றுப்பாசனத்துக்கு பிரதானமாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை சீசனுக்கு பிறகு தக்காளி வழக்கத்தை விட கூடுதல் பரப்பில் சாகுபடியானது.இதனால் இந்தாண்டு துவக்கத்தில் தக்காளி விலை சரிந்து விவசாயிகள் பாதித்தனர்.

    எனவே மீண்டும் இச்சாகுபடி செய்ய தயக்கம் காட்டினர். மேலும் கோடை கால மழை உள்ளிட்ட காரணங்களால் நடப்பு சீசனில், தக்காளி உற்பத்தி பாதித்துள்ளது.எனவே உடுமலை சந்தைக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரிக்க துவங்கியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி தரத்தின் அடிப்படையில் 600-800 ரூபாய் வரை விற்பனையானது. பிற மாவட்டங்களில், தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால் உடுமலை சந்தைக்கு அப்பகுதி வியாபாரிகள் வருகை கூடுதலாக இருந்தது.

    எனவே ஏலத்தில் போட்டி அதிகரித்து விலை ஒரே நாளில் பெட்டிக்கு 100 ரூபாய் வரை கூடுதலாக விற்பனையானது.தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கினால்வரத்து முற்றிலுமாக குறைந்து விலை பல மடங்கு உயரும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    Next Story
    ×