search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    கோவையில் தக்காளி விலை குறைந்தது

    தக்காளி வரத்து குறைவு காரணமாக கடைகளிலும் விலையானது ஏற்றத்துடனேயே காணப்பட்டது. ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையாகி வந்தது.

    கோவை:

    கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக வருகிறது.

    இதுதவிர கிருஷ்ணகிரி, மேச்சேரி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும், மகராஷ்டிரா மாநிலம் நாசிக், கோலார் பகுதிகளில் இருந்தும் அதிகளவிலான தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் மற்றும் சில்லரை விற்பனை கடைகளுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது.

    தக்காளி வரத்து குறைவு காரணமாக கடைகளிலும் விலையானது ஏற்றத்துடனேயே காணப்பட்டது. ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையாகி வந்தது.

    தற்போது மழை குறைந்ததாலும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து நேற்று முதல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலையும் சரிய தொடங்கியது.

    100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி 60 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரைக்கு விற்பனையாகி வருகிறது.

    கோவை டி.கே.மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.60க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.80க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக ரூ.100க்கும் அதிகமாக விற்பனையாகி வந்த தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது இல்லத்தரசிகள் மற்றும் உணவகம் நடத்துபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் தக்காளி தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி தினசரி மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. நேற்று முன்தினம் 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி ரூ.1,250 வரை விற்பனையாகி வந்தது. நேற்று வரத்து அதிகரித்ததால் ரூ.250 சரிந்து ஒரு டிப்பர் முதல் தர தக்காளி ரூ.1000த்திற்கும், இரண்டாம், மூன்றாம் தர தக்காளி 650 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்து அதிகமாக உள்ளதால் வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×