என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை பகுதியில் தக்காளி நாற்றுக்கள் தட்டுப்பாடு

    குறைந்த நாட்களில் நிறைவான லாபம் தரக்கூடிய தக்காளியை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள் மற்றும் கிணற்றுப்பாசனம், ஆழ்குழாய்க் கிணற்று நீரை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வரத்து, நீர் இருப்பு கேற்றவாறு நீண்ட கால பயிர்கள், காய்கறிகள், கீரை வகைகள், தானியங்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    அன்றாட வருமானம் ஈட்டும் சூழல் நிலவுவதால் விவசாயிகள் குறைந்த நாட்களில் நிறைவான லாபம் தரக்கூடிய தக்காளியை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

    தக்காளி விலை உச்சத்தைத் தொட்டதை தொடர்ந்து விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் தக்காளி நாற்றுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் தக்காளி விலை உயரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×