search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee"

    • 10 பெண்கள் இணைந்து குழுவாக மகேந்திரா பைனான்ஸில் தலா 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
    • அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான ஒன்று கூடி தனியார் வசூல் செய்யும் நபரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி குளத்துப்புதூர் பகுதியை சேர்ந்த 10 பெண்கள் இணைந்து குழுவாக மகேந்திரா பைனான்ஸில் தலா 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். வாரம் 1000 ரூபாய் வீதம் 52 வாரம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் 28 வாரம் பணம் செலுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் 29 -வது வாரம் 9 பேர் பணம் செலுத்தி ஒருவர் உடல்நலம் குன்றியதால் 400 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதம் தர வேண்டிய 600 ரூபாய் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து சிவானந்தம் என்ற வசூல் செய்யும் நபர் இரவு 12 மணிக்கு பெண்களை நடுரோட்டில் பிடித்து வைத்து பணம் கட்டவில்லை என்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என மிரட்டியதாக தெரிகிறது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான ஒன்று கூடி தனியார் வசூல் செய்யும் நபரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர் இதனையடுத்து தனியார் நிறுவன ஊழியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள் சொல்லும் வேலையை முடித்து கொடுப்பதாக தெரிவித்தார்.
    • தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் பில்காரியில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் பத்வாரி கஜேந்திர சிங். இவரை சந்தன்சிங் என்பவர் நில பிரச்சினை காரணமாக அணுகினார். அவரிடம் பத்வாரி கஜேந்திர சிங் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள் சொல்லும் வேலையை முடித்து கொடுப்பதாக தெரிவித்தார், ஆனால் லஞ்சம் கொடுக்க சந்தன்சிங் விரும்பவில்லை.

    இது தொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கையும் , களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

    சம்பவத்தன்று வருவாய் துறை அலுவலகத்துக்கு சென்ற சந்தன்சிங், பத்வாரி கஜேந்திர சிங்கிடம் ரூ. 4.500 லஞ்சம் கொடுப்பது போல கொடுத்தார், அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். போலீசாரை பார்த்ததும் பத்வாரி கஜேந்திர சிங் அதிர்ச்சி அடைந்தார். எங்கே தான் ஆதாரத்துடன் சிக்கி கொள்வோமோ என பயந்த அவர் லஞ்சம் வாங்கிய பணத்தை வாயில் போட்டு மென்று விழுங்கினார்

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை ஒரு தட்டில் வாந்தி எடுக்க வைத்தனர். அதில் அவர் விழுங்கிய பணம் கூழாகி வெளியில் வந்தது. பின்னர் அவரை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் அவரை பரிசோதித்த டாக்டர்கள் தற்போது நன்றாக உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.
    • பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கி வருகிறார்கள்.

    இதில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு விண்ணப்பம் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம் அடுக்குமாடி வீடுகளுக்கு ஏறி இறங்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் மூச்சு வாங்கி தவித்து வருகிறார்கள். சென்னையில் பெரும்பாக்கம், கண்ணகி நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, திருமங்கலம், முகப்பேர், வண்ணாரப் பேட்டை, அயனாவரம், கொரட்டூர், அம்பத்தூர், ஆலந்தூர், குரோம்பேட்டை, நொச்சிக் குப்பம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் அதிகம் உள்ளன.

    இங்கு பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர்களை கீழே வரச் சொல்லி விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் கூறுகையில் தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.

    எங்களால் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ச்சியாக ஏறி இறங்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது.

    இதனால் வீடுகளில் இருப்பவர்களை கீழே வரவழைத்து விண்ணப்பம் கொடுக்கிறோம். பூட்டி இருக்கிற வீடுகளில் கொடுக்க முடியவில்லை.

    காலை முதல் இரவு வரை விண்ணப்பம் கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறோம். ஆனாலும் இன்னும் முழுமையாக கொடுத்து முடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

    சென்னையில் 17 லட்சம் விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் உதவியு டன் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக விண்ணப்பம் கொடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • பராமரிப்பு பணி நடப்பதால் 4 நாட்களாக ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அடுத்துள்ள ஸ்ரீரெங்கராஜ புரம் கருப்பூர் புதுத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 47). இவர் பந்தநல்லூர் மெயின் சாலை அரச மரத்தடி பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஓட்டலில் தொழிலா ளியாக வேலை செய்து வந்தார். பராமரிப்பு பணி நடப்பதால் 4 நாட்களாக ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஜாகிர் உசேன் சம்பவதன்று ஓட்டலுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு சுவிட்ச் போர்டு பிளக்கில் இருந்த ஒயரை எடுத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஜாகீர்உசேன் உடல்நிலை பாதிக்கப்ப ட்டார். அவரை குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள், ஜாகீர் உசேன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைய டுத்து ஜாகிர் உசேனின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் அருகே இருந்த மரத்தடியில் பாய்விரித்து படுத்து உறங்கியுள்ளாா்.
    • சாலையின் வளைவில் திரும்பிய போது, உறங்கிக்கொண்டிருந்த ராமசாமி மீது காா் ஏறியது

    அவிநாசி:

    அவிநாசி, காசிகவுண்டன்புதூா் ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்தவா் ராமசாமி (வயது 59). காங்கயம் சாா்பு நீதிமன்றத்தில் இளநிலை கட்டளைதாரராக பணியாற்றி வந்தாா். விடுப்பில் உள்ள ராமசாமி, அவிநாசி மகா நகரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு வந்துள்ளாா். வீட்டின் அருகே இருந்த மரத்தடியில் பாய்விரித்து படுத்து உறங்கியுள்ளாா்.

    அதே பகுதியில் வசித்து வரும் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளா் குருமூா்த்தி (47) தனது வீட்டிலிருந்து காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளாா். அப்போது சாலையின் வளைவில் திரும்பிய போது, உறங்கிக்கொண்டிருந்த ராமசாமி மீது காா் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து குருமூா்த்தியை கைது செய்தனா்.

    • ரூ.4 லட்சத்து 27ஆயிரத்தை வசூலித்து ஊழியர் ஏமாற்றிவிட்டார்
    • மார்க்கெட்டிங் நிறுவனத்தில் நடந்த சம்பவம்

    திருச்சி:

    திருச்சி ஏர்போர்ட் ஜெ.கே. நகர் கோவில் தெரு பகுதியில் ஜா மார்க்கெட்டிங் கம்பெனி அமைந்துள்ளது. இதில் திருச்சி ஜீயபுரம் கரியக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (வயது 32 )என்பவர் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் வீடுகளுக்கு சென்று வசூல் செய்யும் தொகையை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. பின்னர் அலுவலக தணிக்கையில் சிவப்பி ரகாசம் ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 890 தொகையை கையாடல் செய்திருப்பது கண்டுபி டிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மா ர்க்கெட்டிங் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் மதுரை அவனியாபுரம் மேலப்புது தெரு பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார் ஏர்போர்ட் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெருமாநல்லுார் அருகேயுள்ள வட்டாலபதி கிராமம், கருணாம்பதியை சேர்ந்தவர் பிரபு (வயது 44), பனியன் தொழிலாளி.இவர் பெருமாநல்லுாரில் உள்ள ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கொண்டத்துக்காளியம்மன் கோவில் அருகே சென்ற போது இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பிரபுவை வழி மறித்தனர்.

    பின்னர் மறைத்து வைத்திருந்தகத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த, ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பினர்.இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு, பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் பறிப்பில் ஈடுபட்ட ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி லட்சுமி நகரை சேர்ந்த அரவிந்த் (23), சிவசங்கர் (22), முட்டியங்கிணறு பகுதியை சேர்ந்த சாரதி,(21), அணைப்பதியை சேர்ந்த பரசுராமன், (24) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    • இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை.
    • எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கோம்பை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 33 ), மினி பஸ் டிரைவர். இவருக்கும் நர்சிங் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த நித்யா (23) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் நித்யா அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். அதன் பின்னர் அவரது நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டது. 24 மணி நேரமும் செல்போனும் கையுமாக மூழ்கி இருந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் நவீன் என்பவர் நித்யாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

    பின்னர் கணவருக்கு தெரியாமல் நீண்ட நேரம் அவருடன் அரட்டை அடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை ஒருவரை பார்க்கச் செல்வதாக கூறிச்சென்ற நித்யா அதன் பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து புஷ்பராஜ் காதல் மனைவியை அவர் வேலை பார்க்கும் பள்ளி, தோழிகள், உறவினர்கள் வீடு உன தேடி வந்தார். ஆனால் நித்யா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மனைவியின் செல்போனிலிருந்து புஷ்பராஜூக்கு நள்ளிரவில் அழைப்பு வந்தது. உடனே புஷ்பராஜ் செல்போனை எடுத்துப் பேசினார். எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார். இதைக் கேட்டு புஷ்பராஜ் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்.

    பின்னர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசாரின் விசாரணையில்,

    மாயமான நித்யா கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. அந்த இன்ஸ்டாகிராம் நண்பர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உறுதியாக தெரியவில்லை. மதுரையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.

    • காரிப்பட்டி ரெயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் உடல் சிதைந்த நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
    • இனிவாழ வேண்டாம் என முடிவெடுத்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.

    சேலம்:

    சேலம்-விருத்தாசலம் ரெயில்வே மார்க்கத்தில் உள்ள காரிப்பட்டி ரெயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் உடல் சிதைந்த நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த வாலிபர் மின்னாம்பள்ளி அருந்ததியர் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கவிபாரதி (வயது 24) என்று தெரிய வந்தது. சேலம் 4 ரோட்டில் உள்ள காளான் கடையில் இவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர், அதிகாலையில் அவ்வழியே வந்த விருத்தாச்சலம் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    தற்கொலை செய்த கவிபாரதி 4 பக்கங்களில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் அவர் 'நான் எனது கிருஷ்ணனை பார்க்க செல்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி யாரும் வேதனைப்பட வேண்டாம். பக்தியால் முக்தியடைய நினைத்தேன். நிறைய நாள் ஆகும் போல இருக்கு. அதனால் தான், இந்த வழியை முடிவு செய்தேன், என குறிப்பிட்டு ஸ்ரீ ராம ராம என பாடலை எழுதியுள்ளார்.

    அரசாங்கத்திற்கு என்று தலைப்பிட்டு எழுதப்பட்ட மற்றொரு கடிதத்தில், எனது குடும்பத்தினரிடம் எனது உடலை புதைக்கவோ, எரிக்கவோ பணம் இருக்காது. அதனால் அரசாங்கம் எனது இறுதி சடங்கை நடத்த உதவுமாறு கேட்டுகொள்கிறேன். எனது குடும்ப மிகவும் வறுமையிலும், கடன் தொலையிலும் மிக மிக அதிகமாக வருந்தி தவிக்கிறது, என்றும் உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கவிபாரதி உடல்நிலை சரியில்லாத தனது தாய், தந்தையின் மருத்துவ செலவிற்காக ரூ.35 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமலும், சரியாக வேலைக்கு செல்லாமலும் இருந்துள்ளார். இதனால், இனிவாழ வேண்டாம் என முடிவெடுத்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    • ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் செல்லையா (வயது60). இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.ஊழியர். இந்த நிலையில் இவர் மது பழக்கத்திற்கு அடிமை யானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் ரத்த காயத்துடன் விழுந்து கிடந்துள்ளார்.

    உறவினர்கள் அதுகுறித்து விசாரித்த போது தடுமாறி கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செல்லையாவின் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் சுப்பையா (75). இவரது மகன் வளர்ந்த பெருமான். இருவரும் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தங்கியிருந்து பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று அங்குள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் இருவரும் வேறு வேறு இடங்களுக்கு பலூன் விற்க சென்றனர். அப்போது கோவில் அருகே வளர்ந்த பெருமாள் மயங்கி கிடப்பதாக செல்லையாவுக்கு தகவல் வந்தது. அவர் உடனடியாக மகனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வளர்ந்த பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

    சேலம் 4 ரோட்டில் செல்போன் ரீசார்ஜ் கடை ஊழியர் மாயமானார்.
    சேலம்:

    சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் சீனிவாசன் (வயது 18).

    இவர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று வேலைக்கு சென்ற அவர் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார் மாயமான சீனிவாசனை தேடி வருகிறார்கள்.
    சேலம் இரும்பாலை அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
    சேலம்:

    சேலம் இரும்பாலை அகே உள்ள மாரமங் கலத்துப்பட்டி அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் ஹரிபிரகதீஷ் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். 

    இவர் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. 

    தகவல்அறிந்த இரும்பாலை போலீசார் அங்கு விரந்து சென்று அவரது உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சேலம அரசு ஆஸ்பத்திரிக்கு அனுபபி வைத்தனர்.

    அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?  என்பது குறித்து போலீசார் விசா–ரணை நடத்தி வருகின்றனர்.
    ×