பனியன் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு - 4 வாலிபர்கள் கைது

ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்தனர்.
கைது செய்யப்பட்ட வாலிபர்கள்.
கைது செய்யப்பட்ட வாலிபர்கள்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் பெருமாநல்லுார் அருகேயுள்ள வட்டாலபதி கிராமம், கருணாம்பதியை சேர்ந்தவர் பிரபு (வயது 44), பனியன் தொழிலாளி.இவர் பெருமாநல்லுாரில் உள்ள ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கொண்டத்துக்காளியம்மன் கோவில் அருகே சென்ற போது இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பிரபுவை வழி மறித்தனர்.

பின்னர் மறைத்து வைத்திருந்தகத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த, ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பினர்.இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு, பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் பறிப்பில் ஈடுபட்ட ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி லட்சுமி நகரை சேர்ந்த அரவிந்த் (23), சிவசங்கர் (22), முட்டியங்கிணறு பகுதியை சேர்ந்த சாரதி,(21), அணைப்பதியை சேர்ந்த பரசுராமன், (24) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com