search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "avinashi"

    • அசைவ உணவு 9 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
    • 3 கிலோ தகாத முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் அசைவ ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அசைவஓட்டல்களில் சேமித்து வைக்கப்படும் குளிர்சாதன பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? காலாவதியான உணவு பொருட்கள் கொண்டு சமைக்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது குளிர்சாதன பெட்டியில் சமைத்த அசைவ உணவு 9 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சமைத்த சுண்டல் மற்றும் சன்னா 3 கிலோ தகாத முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும் அதிக நிறங்கள் சேர்த்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காலாவதியான காளான் பாக்கெட்டுகள் 4 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் பேக்கரிகளில் உணவு பொருட்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது.

    • தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் அமைக்க மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றன.
    • அரியவகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

    அவிநாசி :

    குறு, சிறு தொழில் தொழிற்பேட்டை சங்கம், அவிநாசி ரோட்டரி இணைந்து வேட்டுவபாளையம் ஊராட்சியில் உள்ள சிறுதொழில் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் அமைக்க மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றன.இதில், அரிய வகை மரங்களான பாவட்டம், மலை பூவரசு, கள்ளிச்சி, சரக்கொன்றை, வாகை, வெப்பாலை, இலந்தை உள்ளிட்ட 80 வகைகளில் 800 மரக்கன்றுகள், சுற்றுச்சூழல் அரியவகை மரக்கன்றுகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களால் நடவு செய்யப்பட்டது.

    இப்பகுதியில் மழைப்பொழிவு, நீர் வளம் குறைவு என்பதால் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச வசதியாக, சொட்டுநீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு 'போர்வெல்' மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கால்நடைகளால் மரக்கன்று சேதமாவதை தவிர்க்க கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

    • மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    • குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20, 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் பழங்கரை, சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இப்பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20, 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதனால் மூன்று ஊராட்சி மக்களும் சாலைமறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

    தகவல் அறிந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சரிவர தண்ணீர் கிடைக்காததால் மூன்று ஊராட்சி பகுதி மக்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். தகவல் அறிந்து குடிநீர் வடிகால் அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து மூன்று ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதியளித்தனர்.

    அதன்படி மூன்று கிராமங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது.

    • ஏலத்திற்கு 1825 மூட்டை பருத்தி வந்திருந்தது.
    • பருத்தி குவிண்டால் ரூ.9000 முதல் ரூ. 3 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    அவினாசி :

    அவினாசி வேளாண்மை உற்பதியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். ஏலத்திற்கு 1825 மூட்டைபருத்தி வந்திருந்தது.

    இதில் ஆர்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ.9000 முதல் ரூ.12,019 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.56.70 லட்சம். அடுத்த வாரம் புதன்கிழமை ஆயுதபூஜை என்பதால் ஒருநாள் முன்னதாக 30ந்தேதி ( செவ்வாய்கிழமை) பருத்தி ஏலம் நடைபெறும் சங்க மேலாண்மை இயக்குனர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு வடிவங்களில் தத்ரூபமான வினாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது
    • 1 அடி முதல் 15 அடி வரை பல்வேறு வடிவங்களில் வினாயகர் சிலை தயாரித்து, கண்கவர் வண்ணம் தீட்டப்படுகிறது.

    அவினாசி :

    அவினாசியை அடுத்து காசி கவுண்டன்புதூரில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு வடிவங்களில் தத்ரூபமான வினாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிற்பி ஆனந்தகுமார் கூறுகையில்,ஆண்டுதோறும் நடைபெறும் வினாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக கடந்த 15 ஆண்டுகளாக வினாயகர் சிலைகளை வடிவமைத்து வருகிறோம்.

    கடந்த ஒரு மாதமாக எனது தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர்கல் மாவு, பேப்பர் மாவு, கிழங்கு மாவு ஆகிய மூன்று கலவைகள் மூலம் 1 அடிமுதல் 15 அடிவரை கற்பக வினாயகர், தாமரை வினாயகர், யானைமுக வினாயகர், காளிமுகம், சிங்கமுகம், மயில்வாகனம், கருடவாகனம், ராஜ அலங்கார வினாயகர் முகம், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வினாயகர் சிலை தயாரித்து அதற்கு ஏற்றார்போல் கண்கவர் வண்ணம் தீட்டப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட வினாயகர் சிலைகள் அவினாசி, அன்னூர், கருவலூர், கோபி நம்பியூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்று கூறினார்.

    • 20 கிராம் கஞ்சா அடைக்கப்பட்ட பாக்கெட் 200 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுவதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
    • பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்.

    அவிநாசி :

    அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக தொடர்ந்து புகார் வருகிறது.பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞரிடம் இருந்து கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.பனியன் நிறுவனங்களில் பணிநேரம் போக எஞ்சிய நேரத்தில் இதுபோன்று கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார் என்பது விசாரணையில் தெரிந்தது. 20 கிராம் கஞ்சா அடைக்கப்பட்ட பாக்கெட் 200 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுவதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

    போலீசார் கூறுகையில், திருப்பூர் நகரம் மட்டுமின்றி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் என பல இடங்களில் இருந்து கஞ்சா வாங்கி வருவதாக பிடிபடுபவர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாவது தான் வருத்தமளிக்கிறது, அவர்களது உடல், மனம் பாதிக்கும்.எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களை கண்காணிக்க வேண்டும். கஞ்சா பழக்கம் வைத்துள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களை திருத்த வேண்டும் என்றனர்.

    • கமிஷனர் ஓடுதளம் அமைக்கும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • போக்குவரத்தை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்தார்.

    கோவை:

    கோவை அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது செக்மென்ட் தொழில் நுட்ப முறையில் ஓடுதளம் அமைக்கப்படுகிறது.

    சிட்ராவில் இருந்து வருவோர் பாலத்தை பயன்படுத்தும் வகையில் பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி அருகில் இருந்து சி.ஐ.டி. கல்லூரி முன்பு வரை ஏறுதளம் அமைக்கப்படு கிறது.

    இதற்கான தூண்கள் கட்டுமானம் முடியும் நிலையில் உள்ளது. அடுத்த கட்டமாக செக்மென்ட் முறையில் கான்கிரீட் ஓடு தளம் அமைக்கப்பட உள்ளது. இரவு நேரத்தில் இப்பணியை மேற்கொள்ள மாநில நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர். போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடு செய்து தருமாறு போக்குவரத்து போலீசாரிடம் அனுமதி கேட்டனர்.

    இதனையடுத்து போக்கு வரத்து உதவி கமிஷனர் சரவணன் ஓடுதளம் அமைக்கும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் தேவைக்கு ஏற்ப கட்டுமான பணி மேற்கொள்ளும் இடத்தில் மட்டும் போக்குவரத்தை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்தார். இதனை யடுத்து ஏறுதளம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர்.

    மேலும் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி முன்பு இருந்து கரூர் வைசியா வங்கி வரை இறங்கு தளம் கட்டுவதற்கான தூண்கள் அமைக்கும் பணியும் வேகமாக நடத்து வருகிறது. 

    • பீரோவை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
    • வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டு நேற்று திரும்பிவந்து பார்த்துள்ளார்.

    அவினாசி :

    அவினாசி கமிட்டியார் காலனியில் வசிப்பவர் தர்மா (வயது 35). இவர் கட்டிட சென்டிரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். பின்னர் நேற்று திரும்பிவந்து பார்க்கையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.30 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதே போல் அவினாசி நியூடவுன் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன்(30) .ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 27-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டு நேற்று திரும்பிவந்து பார்த்துள்ளார்.

    வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 1/2 பவுன் கம்மல் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பல்லடம் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும்.
    • பல்லடம் நகர பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டமக்கள் வசிக்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். திருப்பூர் மாவட்டத்தின் பெரிய சட்டமன்றத் தொகுதியான இதில் 3,62500 வாக்காளர்கள் உள்ளனர். பல்லடம் நகர பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டமக்கள் வசிக்கின்றனர்.

    பல்லடம் நகரில் பல்வேறு வசதிகள் இருந்தும் மருத்துவம், மேல்நிலைக்கல்வி போன்றவைக்கு கோயம்புத்தூர் செல்ல வேண்டி உள்ளது. பல்லடம் வழியாக தினமும் சுமார் 200 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் கோயம்புத்தூர் செல்கின்றன. இவைகள் சூலூர்,சிங்காநல்லூர்,ராமநாதபுரம் வழியாக காந்திபுரம் செல்கின்றன. ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகள், கல்லூரிகள் அவிநாசி ரோட்டில் உள்ளது. இங்கு செல்வதற்கு பல்லடம் மக்கள் காந்திபுரம் சென்று மீண்டும் அங்கிருந்து டவுன் பஸ் பிடித்து பின்னர் அவிநாசி ரோடு வழியாக சென்று மருத்துவமணைகள், கல்லூரிகளுக்கு செல்லவேண்டியுள்ளது. இதனால் கடும் அலைச்சல் மற்றும் கால விரையம் ஏற்படுகிறது. எனவே பல்லடத்திலிருந்து கோயம்புத்தூர் செல்ல அவிநாசி ரோடு வழியாக பஸ்களை இயக்கினால், பல்லடம் மக்களுக்கு கடும் அலைச்சல் மற்றும் கால விரையம் இவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். உதாரணமாக பல்லடத்திலிருந்து மங்கலம், கருமத்தம்பட்டி வழியாகவும், பல்லடத்திலிருந்து சூலூர்,,முத்து கவுண்டம்பாளையம் வழியாகவும், பல்லடம் ,காரணம்பேட்டை, கருமத்தம்பட்டி வழியாகவும், அவிநாசி ரோடு வழியாகவும் கோயம்புத்தூர்க்கு பஸ்களை இயக்க அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதனால் பல்லடம் பகுதியில் இருந்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும், மருத்துவ வசதிக்கு செல்லும் பொதுமக்களுக்கும் பேருதவியாக இருக்கும் என பல்லடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஒரு குடும்பத்துக்கு தலா 3 தென்னங்கன்று வழங்கப்படுகிறது.
    • ஒவ்வொரு கிராமத்துக்கும் 5 கைத்தெளிப்பான், 5 பேட்டரி தெளிப்பான் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

    அவிநாசி :

    அரசின் ஒருங்கிணைந்த வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவிநாசி வட்டாரத்தில் கடந்த ஆண்டு , செம்பியநல்லூர், புதுப்பாளையம், நம்பியாம்பாளையம், சேவூர், பழங்கரை, ஆலத்தூர், பாப்பன்குளம் என, 7 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவது, நீர்வள ஆதாரங்களை பெருக்குவது, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்துவது, வேளாண் விளைப் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவது, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், பண்ணைக்குட்டை அமைப்பது, கிராம வேளாண் உட்கட்டமைப்பு மேம்படுத்துவது போன்ற பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராமத்திலும், 200 விவசாய குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு தலா 3 தென்னங்கன்று வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஒரு கிராமத்துக்கு, 600 வீதம் 7 கிராமங்களுக்கு 4,200 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு கிராமத்துக்கும் 5 கைத்தெளிப்பான், 5 பேட்டரி தெளிப்பான் வீதம் வழங்கப்பட்டுள்ளது. தானியப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, விவசாயிகளை ஒருங்கிணைத்து, 15 எக்டர் பரப்பளவுக்கு, மானிய விலையில் உளுந்து விதை வழங்கப்பட்டுள்ளது.அவிநாசி வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு மேற்பார்வையில், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், தென்னங்கன்று வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    • அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலில் தினமும் 100 நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    • கோவில் நிா்வாகத்தினா் சிசிடிவி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

    அவிநாசி :

    அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலில் தினமும் 100 நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வழக்கம்போல அன்னதானத்துக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

    அப்போது, சுவாமி தரிசனம் செய்ய வந்த தங்கமணி, பாா்வை குறைபாடுள்ள அவரது மகள் இந்திராணி ஆகியோா் அன்னதானம் சாப்பிடச் சென்றுள்ளனா். அதில் தங்கமணிக்கு டோக்கன் கிடைத்ததால் அவா் மட்டும் சாப்பிட அமா்ந்துள்ளாா். இந்திராணி வரிசையில் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து, இந்திராணி சாப்பிடுவதற்காக சென்றுள்ளாா். உடனே அங்கிருந்த கோவில் பெண் பணியாளா் எஸ்.கலாமணி, டோக்கன் இல்லாமல் சாப்பிட அனுமதியில்லை எனக் கூறியுள்ளாா். இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்திராணியை, பணியாளா் கலாமணி தாக்கியதாக புகாா் அளிக்கப்பட்டது.

    இது குறித்து கோவில் நிா்வாகத்தினா் சிசிடிவி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், கோவில் பணியாளா் எஸ்.கலாமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும் ஆகஸ்ட்10ந் தேதி கோவிலில் நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கத்தை எழுத்துப் பூா்வமாக அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    • ஆயிரகணக்கான கார், வேன், லாரி, தனியார் மற்றும் அரசு பஸ்கள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் இடைவிடாமல் சென்று வருகின்றன.
    • வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி - கோவை மெயின்ரோட்டில் தினமும் காலை முதல் ஆயிரகணக்கான கார், வேன், லாரி, தனியார் மற்றும் அரசு பஸ்கள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் இடைவிடாமல் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் ரோட்டில் பின்நோக்கி நடப்பதையும், ரோட்டின்மைய தடுப்பில் அமர்ந்து கொள்வதையும்பல மாதங்களாக வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர் யாராவது அவரிடம் ஏன் இப்படி பின்புறமாக நடக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களை அவர் தகாத வார்த்தையால் திட்டுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    எனவே அவரை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×