search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடர்வனம்"

    • தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் அமைக்க மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றன.
    • அரியவகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

    அவிநாசி :

    குறு, சிறு தொழில் தொழிற்பேட்டை சங்கம், அவிநாசி ரோட்டரி இணைந்து வேட்டுவபாளையம் ஊராட்சியில் உள்ள சிறுதொழில் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் அமைக்க மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றன.இதில், அரிய வகை மரங்களான பாவட்டம், மலை பூவரசு, கள்ளிச்சி, சரக்கொன்றை, வாகை, வெப்பாலை, இலந்தை உள்ளிட்ட 80 வகைகளில் 800 மரக்கன்றுகள், சுற்றுச்சூழல் அரியவகை மரக்கன்றுகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களால் நடவு செய்யப்பட்டது.

    இப்பகுதியில் மழைப்பொழிவு, நீர் வளம் குறைவு என்பதால் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச வசதியாக, சொட்டுநீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு 'போர்வெல்' மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கால்நடைகளால் மரக்கன்று சேதமாவதை தவிர்க்க கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

    • பொது ஒதுக்கீட்டு இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைப்பது வழக்கம்.
    • 2500க்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் 900 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் முறையாக பராமரிப்பின்றி உள்ளன.

    கோவை,

    கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டுமனைகள் பிரிக்கப்படும் போது, அதில் 10 சதவீதம் பரப்பளவிலான இடத்தை பொது ஓதுக்கீட்டு இடமாக (ரிசர்வ் சைட்) ஒதுக்க வேண்டும்.

    இந்த பொது ஒதுக்கீட்டு இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைப்பது வழக்கம். சில இடங்களில் சமூக நலக்கூடம், ரேஷன் கடை போன்ற கட்டிடங்களும் கட்டப்படுகிறது.

    மாநகராட்சி பகுதிகளில் ஏறத்தாழ 2500க்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் 900 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் முறையாக பராமரிப்பின்றி உள்ளன.

    இது தொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, மத்திய, மாநில நெடுஞ்சாலைத்துறைகளின் சார்பில், சாலைகள் விரிவாக்கம் செய்தல், மேம்பாலங்கள் கட்டுதல் போன்ற திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகளின் போது சாலையோர மரங்கள் அகற்றப்படுகின்றன. இதனால் மாநகரில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து பசுமை சூழல் பாதிக்கப்படுகிறது. பசுமைச்சூழலை மேம்படுத்துவதில் பொது ஒதுக்கீட்டு இடங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

    மாநகரில் பல ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பாலும் முறை யாக பராமரிக்காததாலும் வீணாகி வருகின்றன. சாலையோரங்களில் அகற்றப்படும் மரங்களை பொது ஒதுக்கீட்டு இடங்களில் மறுநடவு செய்யும் பணிகளை மாநகராட்சி துரிதப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் கூறியதாவது:-

    மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும், பசுமை பகுதிகளை அதிகரிக்கும் பொருட்டு, மாநகராட்சியின் பொது ஒதுக்கீட்டு இடங்களில் அடர்வனம் மற்றும் பூங்கா ஆகியவற்றை தாங்களாகவே நிறுவி பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள் நகரமைப்பு அலுவலரை 0422-2390261 என்ற எண்ணிலும், mlyvavaki.corpcbe@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

    சாலையோரங்களில் அகற்றப்படும் மரங்களை யும் மறு நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.தடுப்பு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

    ×