search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசி வட்டாரத்தில் 7 கிராமங்களுக்கு 4,200 தென்னங்கன்றுகள்
    X

    கோப்புபடம்.

    அவிநாசி வட்டாரத்தில் 7 கிராமங்களுக்கு 4,200 தென்னங்கன்றுகள்

    • ஒரு குடும்பத்துக்கு தலா 3 தென்னங்கன்று வழங்கப்படுகிறது.
    • ஒவ்வொரு கிராமத்துக்கும் 5 கைத்தெளிப்பான், 5 பேட்டரி தெளிப்பான் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

    அவிநாசி :

    அரசின் ஒருங்கிணைந்த வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவிநாசி வட்டாரத்தில் கடந்த ஆண்டு , செம்பியநல்லூர், புதுப்பாளையம், நம்பியாம்பாளையம், சேவூர், பழங்கரை, ஆலத்தூர், பாப்பன்குளம் என, 7 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவது, நீர்வள ஆதாரங்களை பெருக்குவது, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்துவது, வேளாண் விளைப் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவது, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், பண்ணைக்குட்டை அமைப்பது, கிராம வேளாண் உட்கட்டமைப்பு மேம்படுத்துவது போன்ற பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராமத்திலும், 200 விவசாய குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு தலா 3 தென்னங்கன்று வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஒரு கிராமத்துக்கு, 600 வீதம் 7 கிராமங்களுக்கு 4,200 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு கிராமத்துக்கும் 5 கைத்தெளிப்பான், 5 பேட்டரி தெளிப்பான் வீதம் வழங்கப்பட்டுள்ளது. தானியப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, விவசாயிகளை ஒருங்கிணைத்து, 15 எக்டர் பரப்பளவுக்கு, மானிய விலையில் உளுந்து விதை வழங்கப்பட்டுள்ளது.அவிநாசி வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு மேற்பார்வையில், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், தென்னங்கன்று வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×