search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒன்றியம்"

    • 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • கிராம ஊராட்சி நிர்வாகம் ,பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    உடுமலை

    சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் , பொதுமக்கள் பங்கேற்றனர். சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்று விழா நடைபெற்றது.அதைத்தொடர்ந்து கிராம ஊராட்சி நிர்வாகம் ,பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 839 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. மெய்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பால சுப்பிரமணியம், துணைத்தலைவர் விஸ்வநாதன், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ராகல்பாவி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி தலைமை வகித்தார். ஆண்டியகவுண்டனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கி.ஊ) கலந்து கொண்டார்.

    இதே போன்று சின்னவீரன் பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையிலும் பூலாங்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா இளங்கோவன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள், தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், உடுமலை வட்ட சட்ட பணிகள் குழுவை சேர்ந்த நிர்வாகிகள், வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நரிக்குடி ஒன்றியத்திற்கு பொறுப்பு சேர்மன் பதவியேற்றார்.
    • கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத்திட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 அ.தி.மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத்திட்டனர்.

    இதுகுறித்து விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்ப ட்டது. அதனை ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார்.

    அந்த அறிக்கையை பரிசீலனை செய்த ஊரக தழிலும் வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து சேர்மன் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒன்றிய தலைவர் இல்லாததால் பல மாதங்களாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியில் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நரிக்குடி ஒன்றிய நிர்வாக நலன் கருதி துணை சேர்மனாக இருந்த அம்மன் பட்டி ரவிச்சந்திரனை சேர்மனாக (பொறுப்பு) செயல்பட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்தார்.

    இதனையடுத்து நரிக்குடி ஒன்றிய சேர்மனாக அம்மன்பட்டி ரவிச்சந்திரன் பொறுப்பேற்று கொண்டார்.அவருக்கு நரிக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், வாசுகி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் அம்மன்பட்டி, அரசு அலுவலர்கள்,கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் நரிக்குடி ஒன்றிய புதிய சேர்மனான அம்மன்பட்டி ரவிச்சந்திரனுக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    அம்மன்பட்டி மற்றும் உடைய சேர்வைக் கார் பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பொறுப்பு சேர்மன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    • சங்கரன்காவு பகுதியில் 7 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை
    • ஊர்வலம் வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    தக்கலை ஒன்றியம் பத்மநாபபுரம் நகரம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி அன்று 153 ஊர்களில் விநாயகர் சிலைகள் பூஜையில் வைக்கப்பட்டது.

    இந்த சிலைகள் குமாரபுரம், விலவூர், கோத நல்லூர், சடையமங்கலம், திருவிதாங்கோடு, இரணியல், முளகு மூடு, திக்கணங்கோடு,வாழ்வச்ச கோஷ்டம், மருதூர்குறிச்சி, கல்குறிச்சி, முத்தல குறிச்சி, கப்பியறை ஆகிய உள்ளாட்சி பகுதிகளில் உள்ள ஊர்களில் வைக்கப்பட்டிருந்தது. திருவிதாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சங்கரன்காவு பகுதியில் 7 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை பூஜையில் வைக்கப்பட்டிருந்தது.

    நேற்று ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் பூஜையில் வைக்கப்பட்டி ருந்த அனைத்து விநாயகர் சிலைகளும் அலங்கரிக்கப் பட்ட வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் ஆலய வளாகம் கொண்டுவரப்பட்டது.

    அங்கு தொடங்கிய ஊர்வலமானது மணலி, மேட்டுக்கடை , தக்கலை பழைய பஸ் நிலையம் , கல்குறிச்சி , இரணியல், திங்கள் சந்தை , லட்சுமிபுரம் வழி மண்டைக்காடு கடற்க ரையை வந்து அடைந்தது. பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சுதேசன் உட்பட ஏராளமான போலீ சார் பங்கேற்று இருந்தனர். தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டது.

    • மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    • குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20, 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் பழங்கரை, சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இப்பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20, 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதனால் மூன்று ஊராட்சி மக்களும் சாலைமறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

    தகவல் அறிந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சரிவர தண்ணீர் கிடைக்காததால் மூன்று ஊராட்சி பகுதி மக்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். தகவல் அறிந்து குடிநீர் வடிகால் அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து மூன்று ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதியளித்தனர்.

    அதன்படி மூன்று கிராமங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது.

    • முகாமிற்கு நாகை மாவட்ட தனி தாசில்தார் (தேர்தல் பிரிவு) கிரிஜாதேவி தலைமை தாங்கினார்.
    • வருவாய் ஆய்வாளர் ஜீவா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பில்லாளி, திருப்பயத்தங்குடி, கீழத்தஞ்சாவூர், கீழப்புதனூர், காரையூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நாகை மாவட்ட தனி தாசில்தார் (தேர்தல் பிரிவு) கிரிஜாதேவி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ஜீவா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். மொத்தம் 269 மனுக்கள் அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி சகாயராஜ், பாண்டியன் சத்யமூர்த்தி, தமிழரசி கணேசன், கலாராணி உத்திராபதி, உள்ளாட்சி பிரதிநிதி லீலாவதி பிரபாகரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×