என் மலர்
நீங்கள் தேடியது "cotton"
- ஏலத்தில் 1, 931 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
- ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.50 லட்சத்து 26 ஆயிரம் என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளா்கள் தெரிவித்தனா்.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.50 லட்சத்து 26 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 1, 931 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில், ஆா்.சி.எச். பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ரூ.8,000 முதல் ரூ.9,362 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ.2, 000 முதல் ரூ.4, 000 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.50 லட்சத்து 26 ஆயிரம் என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளா்கள் தெரிவித்தனா்.
- அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் பருத்தியில் அதிக மகசூலை கொடுக்கும் பூஸ்டர் பற்றிய விழிப்புணர்வு நடந்தது.
- பருத்தி பிளஸ் என்னும் பயிர் ஊக்கி அறிமுகப்படுத்தப்பட்டது.
பாலையம்பட்டி
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி உலக பருத்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பருத்தியில் அதிக மகசூல் பெற பருத்தி பிளஸ் தெளிப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
வேளாண்மை பல்கலைக்கழத்தின் பயிர் வினையியல் துறை மூலம் பருத்தி பிளஸ் என்னும் பயிர் ஊக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இது பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் ஏக்கருக்கு 2.5 கிலோ தெளிக்க வேண்டும்.
இது பூ உதிர்வை கட்டுப்படுத்தும். காய் பிடிப்பு திறனை அதிகரிக்கும். இதனை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அருப்புக்கோட்டை கோபாலபுரம் கிராமத்தில் பருத்தி பிளஸ் தெளிப்பு பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் பயிர் வினையியல் துறை உதவி பேராசிரியர் பாபு ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தொழில் நுட்ப உரையாற்றினார். அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு ஒருங்கிணைத்தார்.
- 443 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9229 -க்கும் குறைந்தபட்சவிலையாக ரூ.6240-க்கும் விற்பனையானது.
மூலனூர் :
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 443 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.
வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9229 -க்கும் குறைந்தபட்சவிலையாக ரூ.6240-க்கும் சராசரி விலையாக ரூ. 7750-ற்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 3460 மூட்டைகள், குவிண்டால் 1065.29. இதன் மதிப்பு ரூ.82 லட்சத்து 75 ஆயி்ரத்து 26 ஆகும். 12 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
- பொது ரகத்துக்கு ரூ.2015 என உயர்த்தி கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
- இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 636 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கினை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லை கொள்முதல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஆண்டு தோறும் அக்டோபர் 1ஆம் தேதி தான் குறுவை நெல் கொள்முதல் செய்யப்படும்.
ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே மாத இறுதியில் திறக்கப்பட்டது.
இந்த காரணத்தினால் குறுவை அறுவடை முன்கூட்டியே வரும் என்று உணர்ந்த முதலமைச்சர் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் குறைந்தபட்ச ஆதார விலை சன்ன ரகத்துக்கு ரூ.2160, பொது ரகத்துக்கு ரூ.2015 என உயர்த்தி கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
திறந்தவெளியில் இருக்கிற நெல் நனையாமல் இருப்பதற்காக 3 லட்சம் மெட்ரிக் டன் செமி குடோன் கட்டுவதற்காக ரூ. 238 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 20 இடங்களில் பணி ஆரம்பிக்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 50 ஆயிரம் மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட செமி குடோன் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணி அடுத்த மாதம் 31-ம் தேதிக்குள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
2022-23 நெல் கொள்முதல் பருவங்களில் இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 636 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 29 ஆயிரத்து 859 விவசாயிகளுக்கு ரூ.417 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்சமயம் 819 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
508 பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர்களை இந்த ஆண்டு பணியமர்த்த இருக்கிறோம்.
இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 5008 பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலைய ங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாயிகள் 585 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- 15 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்
மூலனூர் :
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 585 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.10,888-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7,150-க்கும் சராசரி விலையாக ரூ.9,050-க்கும் விற்பனையானது.
பருத்தியின் மொத்த அளவு 4,713 மூட்டைகள், 1534.61 குவிண்டால் மதிப்பு ரூ.1 கோடியே 37 லட்சத்து 23 ஆயிரத்து 772 ஆகும். 15 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என்று திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார்.
- தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று பருத்திக்கான 1 சதவீத செஸ் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
- இத்துறைைய பலப்படுத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு என தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம்
மதுரை விமான நிலையம் வந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வேட்டி-சேலை சம்பந்தமாக எந்தவித குற்றச்சாட்டும் இல்லை. அதேபோல் இந்த ஆண்டும் தரமான வேட்டி-ேசலை வழங்கப்படும்.
தி.மு.க. ஆட்சியில் கைத்தறி துறை தற்போது நல்ல மாற்றம் அடைந்துள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது எப்படி மக்களுக்கான திட்டங்களை கொடுத்தாரோ அதேபோல் இரண்டு மடங்காக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாங்கள் தவறு செய்தால்கூட எங்களை முதல்வர் விடமாட்டார்.
பருத்தி தட்டுப்பாடு என்பது நம் கையில் இல்லை. மத்திய அரசிடம் தான் உள்ளது.
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றப்பிறகு பருத்திக்கான 1 சதவீத செஸ் வரியை குறைக்க கோரிக்கை விடுத்ேதாம். அதன்படி சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது 1 சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்துறைைய பலப்படுத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு என தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி துறை இன்னும் பெரிய அளவில் முன்னேற்றம் அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் அபரிமிதமான நூல் விலை உயர்வு.
- பின்னலாடை உற்பத்தி, கைத்தறி, விசைத்தறி தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் :
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய ஜவுளி அமைச்சர் பியூஷ்கோயலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் அபரிமிதமான நூல் விலை உயர்வால், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி, கைத்தறி, விசைத்தறி தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.வரும் அக்டோபர் மாதம் புதிய பருத்தி சீசன் துவங்குகிறது. நடப்பு ஆண்டு பருத்தி உற்பத்தி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பருத்தி உற்பத்தி அதிகரித்தாலும், உள்நாட்டு தேவைக்குதான் போதுமானதாக இருக்கும்.எனவே மத்திய அரசு உடனடியாக பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும். மூலப்பொருளான பஞ்சை ஏற்றுமதி செய்வதைவிட, ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது நாட்டுக்கு அதிக அளவு அன்னிய செலாவணி கிடைக்கும்.ஆடை உற்பத்தி தொழிலும், இந்த தொழில் சார்ந்த பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறைமுக ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
- அதுசமயம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்ட வியாபாரிகள் தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,839-க்கு ஏலம் போனது.
திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறைமுக ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்படி திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் கேட்டனர்.
அதுசமயம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்ட வியாபாரிகள் தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர்.
அதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில் முருகன், மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.
இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9 ஆயிரத்து 839-க்கு ஏலம் போனது.
குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 509-க்கும், சராசரியாக பருத்தி ரூ.8 ஆயிரத்து 432-க்கும் விற்பனையானது.
இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.48 லட்சம் மதிப்பில் பருத்தி விற்பனையானது.
- தமிழக ஜவுளித்துறையினருக்கு இன்னும் திட்டங்கள் தேவை.
- போட்டி நாடுகளை சமாளிக்கும் அளவுக்கு பலம் கிடைக்கும்.
திருப்பூர் :
திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி திருப்பூர் வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருப்பூர் பின்னலாடைத்தொழில் மேம்படுவதற்கான கோரிக்கைகள் குறித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது- தற்போது தங்களின் சீரிய முயற்சியால், பின்னலாடை மற்றும் ஜவுளி வர்த்தகம் வளர்வதற்கான பல சாதக சூழ்நிலைகள் உருவாகிவருகின்றன. இந்த நிலையில் தமிழக ஜவுளித்துறையினருக்கு இன்னும் சற்று தேவையான திட்டங்களை அறிவித்தால், போட்டி நாடுகளை சமாளிக்கும் அளவுக்கு பலம் கிடைக்கும். சர்வதேச அளவில் ஏற்றுமதியை உயர்த்த முடியும். எங்களின் கோரிக்கைகள் பின்வருமாறு:
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம் சீராக வளர்ச்சி பெற வேண்டுமானால், பருத்தி, பஞ்சு விலை நிலையாக இருக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு சார்பில் தனிக்கமிட்டி உருவாக்கப்பட்டு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் அத்தியாவசியப்பட்டியலில் பஞ்சு நூல் பொருட்களை சேர்த்து, உள்நாட்டு தேவைக்குப்போக மீதமுள்ள பஞ்சு நூலை மட்டும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு வழிவகை செய்ய வலியுறுத்த வேண்டும்.
நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி, தமிழகத்தில் அதிகளவில் பருத்தியை விளைவிக்க அனைத்துவிதங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முறைகேடாக பஞ்சுநூலை பதுக்கிவைத்து செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி கள்ளச்சந்தையில் லாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் மற்றும் சமூகவிரோதிகள்மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நூல்விலை உயர்வு, பஞ்சு பற்றாக்குறையால் கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகத்தில் பாதிக்கப்பட்ட தொழில் துறையினருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மானிய விலையில் எரிவாயு (பைப்லைன் கேஸ்) திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினால், தொழில் மற்றும் உற்பத்திக்கூடங்களின் செலவினங்கள் குறையும். விலையை குறைத்து சர்வதேச போட்டியாளர்களுடன் திறந்தவெளிச்சந்தையில் நமது சரக்குகளை எளிதில் விற்பனை செய்ய முடியும். மாவட்ட தொழில் மையத்தின், மானிய எந்திரத்தொழில் கடன்களை பெறும் வழிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும்.
மின்சார கட்டணத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுபோல் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கும் மானியம் மற்றும் சலுகை விலை வழங்கப்பட வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை ஒழுங்குமுறைப்படுத்த தனி அதிகாரி மூலம் கண்காணிப்புத்துறை ஏற்படுத்தப்பட வேண்டும். இதனால் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து தமிழக ஜவுளித்தொழில் துறையினருக்கு பலம் சேர்க்கும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் சர்வதேச அளவில் தமிழக தொழில் துறையினர் மேலும் பல சாதனைகளை புரிவார்கள் என்பதில் சந்தேகமில்லை.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
- ஏலத்திற்கு 1825 மூட்டை பருத்தி வந்திருந்தது.
- பருத்தி குவிண்டால் ரூ.9000 முதல் ரூ. 3 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
அவினாசி :
அவினாசி வேளாண்மை உற்பதியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். ஏலத்திற்கு 1825 மூட்டைபருத்தி வந்திருந்தது.
இதில் ஆர்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ.9000 முதல் ரூ.12,019 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.56.70 லட்சம். அடுத்த வாரம் புதன்கிழமை ஆயுதபூஜை என்பதால் ஒருநாள் முன்னதாக 30ந்தேதி ( செவ்வாய்கிழமை) பருத்தி ஏலம் நடைபெறும் சங்க மேலாண்மை இயக்குனர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
- சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.
- இதில் 948 பருத்தி மூட்டைகள் ரூ. 35 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்பு றம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பா ளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குரு சாமி பாளையம், அம்மா பாளை யம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசா யிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 948 பருத்தி மூட்டைகள் ரூ. 35 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
ஆர்.சி.எச் ரகப் பருத்தி 521மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 368 மூட்டைகளும், கொட்டு பருத்தி 59 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.9899-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12595--க்கும், சுரபி ரகப் பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.9739 முதல் அதிகப் பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12289 -க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5995 முதல் அதிகப்பட்சமாக ரூ.7395-க்கும் ஏலம் விடப்பட்டது.
- திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியா–ளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மாணிக்கம்பாளையம் மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.17.21 லட்சத்திற்கு விற்பனை ஆனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியா–ளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மாணிக்கம்பாளையம் மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விற்பனைக்காக 470 பருத்தி மூட்டைகள் வந்தன.
பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 199 முதல் ரூ.11 ஆயிரத்து 202 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 499 முதல் ரூ.11 ஆயிரத்து 352 வரையிலும் என மொத்தம் ரூ.17.21 லட்சத்திற்கு விற்பனை ஆனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.