search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,839-க்கு ஏலம்
    X

    திருவாரூரில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,839-க்கு ஏலம்

    • விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறைமுக ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
    • அதுசமயம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்ட வியாபாரிகள் தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,839-க்கு ஏலம் போனது.

    திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறைமுக ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.

    அதன்படி திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் கேட்டனர்.

    அதுசமயம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்ட வியாபாரிகள் தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர்.

    அதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில் முருகன், மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.

    இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9 ஆயிரத்து 839-க்கு ஏலம் போனது.

    குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 509-க்கும், சராசரியாக பருத்தி ரூ.8 ஆயிரத்து 432-க்கும் விற்பனையானது.

    இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.48 லட்சம் மதிப்பில் பருத்தி விற்பனையானது.

    Next Story
    ×