search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moolanoor regulated market"

    • 443 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9229 -க்கும் குறைந்தபட்சவிலையாக ரூ.6240-க்கும் விற்பனையானது.

    மூலனூர் :

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 443 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

    வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9229 -க்கும் குறைந்தபட்சவிலையாக ரூ.6240-க்கும் சராசரி விலையாக ரூ. 7750-ற்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 3460 மூட்டைகள், குவிண்டால் 1065.29. இதன் மதிப்பு ரூ.82 லட்சத்து 75 ஆயி்ரத்து 26 ஆகும். 12 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    • விவசாயிகள் 585 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • 15 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்

    மூலனூர் :

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 585 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.10,888-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7,150-க்கும் சராசரி விலையாக ரூ.9,050-க்கும் விற்பனையானது.

    பருத்தியின் மொத்த அளவு 4,713 மூட்டைகள், 1534.61 குவிண்டால் மதிப்பு ரூ.1 கோடியே 37 லட்சத்து 23 ஆயிரத்து 772 ஆகும். 15 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என்று திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். 

    ×