என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பருத்திக்கான 1 சதவீத செஸ் வரி: அமைச்சர் காந்தி பேட்டி
  X

  பருத்திக்கான 1 சதவீத செஸ் வரி: அமைச்சர் காந்தி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று பருத்திக்கான 1 சதவீத செஸ் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
  • இத்துறைைய பலப்படுத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு என தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

  அவனியாபுரம்

  மதுரை விமான நிலையம் வந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வேட்டி-சேலை சம்பந்தமாக எந்தவித குற்றச்சாட்டும் இல்லை. அதேபோல் இந்த ஆண்டும் தரமான வேட்டி-ேசலை வழங்கப்படும்.

  தி.மு.க. ஆட்சியில் கைத்தறி துறை தற்போது நல்ல மாற்றம் அடைந்துள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது எப்படி மக்களுக்கான திட்டங்களை கொடுத்தாரோ அதேபோல் இரண்டு மடங்காக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாங்கள் தவறு செய்தால்கூட எங்களை முதல்வர் விடமாட்டார்.

  பருத்தி தட்டுப்பாடு என்பது நம் கையில் இல்லை. மத்திய அரசிடம் தான் உள்ளது.

  தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றப்பிறகு பருத்திக்கான 1 சதவீத செஸ் வரியை குறைக்க கோரிக்கை விடுத்ேதாம். அதன்படி சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது 1 சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளது.

  மேலும் இத்துறைைய பலப்படுத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு என தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி துறை இன்னும் பெரிய அளவில் முன்னேற்றம் அடையும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×