search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா புழக்கம்"

    • 20 கிராம் கஞ்சா அடைக்கப்பட்ட பாக்கெட் 200 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுவதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
    • பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்.

    அவிநாசி :

    அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக தொடர்ந்து புகார் வருகிறது.பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞரிடம் இருந்து கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.பனியன் நிறுவனங்களில் பணிநேரம் போக எஞ்சிய நேரத்தில் இதுபோன்று கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார் என்பது விசாரணையில் தெரிந்தது. 20 கிராம் கஞ்சா அடைக்கப்பட்ட பாக்கெட் 200 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுவதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

    போலீசார் கூறுகையில், திருப்பூர் நகரம் மட்டுமின்றி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் என பல இடங்களில் இருந்து கஞ்சா வாங்கி வருவதாக பிடிபடுபவர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாவது தான் வருத்தமளிக்கிறது, அவர்களது உடல், மனம் பாதிக்கும்.எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களை கண்காணிக்க வேண்டும். கஞ்சா பழக்கம் வைத்துள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களை திருத்த வேண்டும் என்றனர்.

    ×