search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள்"

    • நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்
    • பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் அறிவுரைப்படி சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

    இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செல்போன் எண் பதிவு மற்றும் செல்போன் எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில்

    பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்- 2019 -ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ஒரு அடி முதல் பல அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதனை நீர்நிலைகளில் கரைத்து விழாவினை நிறைவு செய்வர்.
    • சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    தாராபுரம்:

    விநாயகர் சதுர்த்தி அன்று இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பொது இடங்களில் ஒரு அடி முதல் பல அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதனை நீர்நிலைகளில் கரைத்து விழாவினை நிறைவு செய்வர். இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி அன்று வருகிறது. அதையொட்டி தாராபுரம், உடுமலை பகுதியில் மண்பாண்ட கலைஞர்கள் விநாயகர் சிலை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தாராபுரம் உடுமலை ரோடு பகுதியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் விமரிசையாக கொண்டாடுவர். அன்றைய தினம் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். அதில் காவல் விநாயகர், மோட்டார் வாகன விநாயகர் என பல உருவங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவர். அன்று விநாயகருக்கு பிடித்தமான கொளுக்கட்டை, அவல்,பொறி மற்றும் இனிப்புகள் படையல் வைத்து பூஜைகள் நடைபெறும். சில இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

    பின்னர் அடுத்த நாள் அல்லது 3 நாட்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதற்கான விநாயகர் சிலைகள் தற்போது தயாரித்து வருகிறோம். அந்த சிலைகள் அரை அடிமுதல் 3 அடி உயரம் வரை உள்ளதாக தயார் செய்து உள்ளோம். அவற்றிற்கு கண்ணை கவரும் வண்ணங்கள் கொடுத்து விற்பனைக்கு வைத்துள்ளோம்.

    விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் அதனை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவல கம் அருகே மணிப்பூர் சம்ப வத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத் தில் மணிப்பூரில் நடை பெறும் வன்முறை சம்ப வங்களை கண்டித்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சேலம்:

    அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவல கம் அருகே மணிப்பூர் சம்ப வத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கட்சியின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஐசக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத் தில் மணிப்பூரில் நடை பெறும் வன்முறை சம்ப வங்களை கண்டித்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஐசக் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மணிப்பூரில் மிகப்பெரிய வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெண் கள் நிர்வாணப்ப டுத்தி கொடுமைப்ப டுத்தப்படு கிறார்கள். 500 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எடுக்கப்பட்டுள் ளன. பாதிரியார்கள் தாக்கப்பட் டுள்ளனர்.இதற்கு காரணமான வர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாநில அரசை, மத்திய அரசு கலைக்க வேண்டும்.

    இந்தியாவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவ டிக்கை இல்லை. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய அரசில் மாற்றம் தேவை. தமிழக அரசு சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பாக உள்ளது. தமிழ கத்தில் தி.மு.க.வுக்கும், தேசிய அளவில் காங்கிரசுக்கும் எப்போ தும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மண்டல பேராயர் ஹெரால்டு டி.டேவிட், கிழக்கு மாவட்ட பேராயர் ஜோசப் மோகன்,மேற்கு மண்டல பேராயர் டேனியல், வடக்கு மண்டல பேராயர் டேவிட் குட்டி,கிழக்கு மண்டல பேராயர் பர்ண பாஸ், நாமக்கல் மாவட்ட பேராயர் சாமுவேல், முதன்மை பொது செயலா ளர் சரவணன், சேலம் மாவட்ட செயலாளர் ஜான் ஐசக் ,சேலம் மாவட்ட தலை வர் ராமு செல்வராஜ்,சேலம் மாவட்ட பொருளாளர் பீட்டர், மேற்கு தொகுதி செயலாளர் மார்டின் செந்தில் குமார் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

    • 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது
    • மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர் .

    உடுமலை:

    உடுமலை ஒன்றியம் ராவணாபுரம் கிராமத்தில் உள்ள இணைப்பு சாலை வழியாக பாண்டியன் கரடு , நல்லாறு, மயிலாடும்பாறை, முள்ளுப்பாடி உள்ளிட்ட இடங்களுக்கு கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

    கடந்த 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது .அதற்கு பிறகு புதுப்பிக்கப்படவில்லை. இதனால் சாலை பழுது அடைந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள தோட்டத்து சாலைகளுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர்.

    எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இங்குள்ள தடுப்பணையின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக் கொண்டும் பிறர் ஆட்டிவிட்டும்ஆடுவர்.
    • ஊஞ்சலாட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது

    உடுமலை:

    ஊஞ்சல் என்பது சங்க காலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. கொங்கு நாட்டார் இதனை கூலி என்றும் சூரிய என்றும் அழைக்கின்றனர். சிறுவர்கள் விழுதுகளை பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடுவர் .மரக்கலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுமியரும் ஊஞ்சலாடு வார்கள். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக் கொண்டும் பிறர் ஆட்டிவிட்டும்ஆடுவர்.இந்தநிலையில் ஆடிப்பெருக்கையொட்டி ஜல்லிப்பட்டி, தளி உள்ளிட்ட இடங்களில் சிறுவர் சிறுமிகள் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர்.

    ஊஞ்சல் கொண்டாட்டம் குறித்து இப்பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கூறியதாவது:- ஆடி 18ஐ நோன்பு என்று தான் அழைப்போம். ஒரு நாள் முன்பே ஜல்லிப்பட்டி கிராமத்திற்குசென்று விடுவோம். எப்பொழுது விடியும் என காத்திருப்போம். எங்கள் பாட்டி வீட்டில் பெரிய நீளமான வீட்டின் முன்பு குழந்தைகள் உடன் கதைகள் பேசி தூங்குவதற்கு நள்ளிரவு 2 மணி ஆகிவிடும். காலையில் பொம்மையன் கோவில் முன்பு பெரிய மரங்கள் நட்டு பெரிய அகலமான மரப்பலகையை உட்காருவதற்கான வசதியாக அமைப்பார்கள். அதற்கு சந்தனம் குங்குமம் மாவிலை கட்டி மஞ்சள் துணியில் நவதானியங்கள் உள்ளே வைத்து அந்த ஊஞ்சலுக்கு கோவில் பூஜை செய்வர்.

    குழந்தைகளுடன் முதல்முறையாக ஊஞ்சல் ஆடும் போது ரோல் கோஸ்டர் ஜெயின்ட் வீல் எல்லாம் தோற்றுவிடும். பெரியவர்கள் தோட்டத்து வேலைக்கு சென்று வந்த பின்பு இரவில் ஊஞ்சலாடி பாட்டுப்பாடி தங்களின் களைப்பை போக்கிக் கொள்வார்கள். முப்பது வருடங்களுக்கு முன்பாக கூட ஆடி 18 தினத்திற்காக மரத்தில் ஊஞ்சல் கட்டி தூரிஆடிய துண்டு. ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம் .வீட்டில் இருக்கும் உபகரணங்களிலேயே அதிக மகிழ்ச்சி தரக்கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாக அது குறைந்து காணாமல் போய்விட்டது .இந்த ஊஞ்சலாட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.

    இப்பொழுதும் பசுமையாக எண்ணங்களின் வாழ்க்கைச் சக்கரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். நம் தலைமுறைக்கு குழந்தைக ளுக்கு இதை மறக்காமல் கொண்டு போக வேண்டியது நமது கடமை.

    னஇதை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

    • மாரியம்மன் சுயம்புவாக எழுந்தருளி நீண்ட காலமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    • செவ்வாய், வியாழன், ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலை அடுத்த ஆனைமலை காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகு தியில் சின்னாற்றின் கரையில் பிரசித்தி பெற்ற கட்டளை மாரியம்மன் கோயில் உள்ளது.

    இங்கு மாரியம்மன் சுயம்புவாக எழுந்தருளி நீண்ட காலமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோவிலில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் காலங்காலமாக கோவிலில் பூஜைகளை செய்து வருகின்றனர். கோவிலுக்கு உடுமலை பகுதியில் மட்டுமின்றி வெளி மாவட்ட ங்கள் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமையை யொட்டி பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். பின்னர் அவர்கள் கோடந்தூர் சுற்றுச்சூழல்குழு மற்றும் வனத்துறை இணைந்து செயல்படுத்தி வரும் வாகனங்களில் ஏறிச்சென்று கோவிலை அடைந்தனர்.அதைத் தொடர்ந்து ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வந்து மாரியம்மனை சாமி தரிசனம் செய்தனர்.மேலும் மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் இயற்கையாக விளைந்த நெல்லிக்காய், கடுக்காய், ஜாதிக்காய், சாம்பிராணி, வடுமாங்காய், எலுமிச்சை மற்றும் தேன், தைலம் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இயற்கையில் விளைந்த பொருட்கள் என்பதால் அவற்றை பொதுமக்களும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.

    கோடை காலத்தில் வருமானத்தை இழந்து தவித்து வருகின்ற மலைவாழ் மக்களுக்கு இந்த பொருட்கள் கைகொடுத்து உதவுகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது. இதனால் சாகுபடி பணிகளுக்கு மழைவாழ் மக்கள் விளை நிலங்களை தயார் செய்து வருகின்றனர்.

    • ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர்.
    • ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒம்பலகட்டு கிராமத்தில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு வனப்பகுதியில் குடியேறி ஊரில் புகுந்துள்ள பேயை விரட்ட முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று அதிகாலையில் ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர். அப்போது தாங்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளையும் உடன் அழைத்து சென்றனர். ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள் நாள் முழுவதும் அங்கேயே தங்கி வன தேவதைகளை வழிபட்டு சமைத்து சாப்பிட்டனர். பின்னர் மாலை சூரியன் மறைந்த பின் கிராம தெய்வங்களுடன் கரகம் எடுத்து கொண்டு முன்னால் செல்ல, அந்த கரகத்தின் பின்னால் கிராம மக்கள் அணிவகுத்து சென்றனர்.

    பின்னர் தங்கள் ஊர் எல்லையை சென்றடைந்ததும் ஆடுகளை பலியிட்டு வழிபட்டதுடன் தங்கள் வீடுகளுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

    • கன்னிமாா், கருப்பராயன், வேட்டைக்காரன் முனியப்பன் சுவாமி கோயில் பொங்கல் திருவிழாக்கள் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றன.
    • வேட்டைக்கு செல்பவா்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றனா்.

    அவிநாசி :

    அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் புதுக்காலனி பகுதியில் உள்ள கன்னிமாா், கருப்பராயன், வேட்டைக்காரன் முனியப்பன் சுவாமி கோயில் பொங்கல் திருவிழாக்கள் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றன. திருவிழாவின் நிறைவாக முயல் வேட்டைக்கு செல்வதை இப்பகுதி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை வழக்கம்போல் 50க்கும் மேற்பட்டவா்கள் முயல் வேட்டைக்கு புறப்பட்டனா்.

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த வன அலுவலா் ம.சுரேஷ் கிருஷ்ணன் தலைமையிலான அலுவலா்கள் முயல் வேட்டைக்கு புறப்பட்ட மக்களை தடுத்து நிறுத்தினா். மேலும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி முயல்களை வேட்டையாடுவது குற்றம் என்றும், வேட்டைக்கு செல்பவா்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றனா். 

    • பல்வேறு கோரிக்கைகள் குறித்த 240 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
    • 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 240 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

    பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளு மாறு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுப்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும், 1 பயனாளிக்கு இலவச சலவை பெட்டியினையும் மற்றும் திட கழிவு மேலாண்மையில் சிறந்த பங்களிப்பு கொண்டவர்களுக்கும், தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் பங்குபெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டு சான்றிதழினையும், உலக சுற்றுச்சுழல் தினத்தினை முன்னிட்டு பசுமை சாம்பியின் விருதினை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் உலக சுற்றுச்சுழல் தினத்தினை முன்னிட்டு உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்துதுறை அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

    இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் தனிதுணை ஆட்சியர் அழகர்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது.
    • யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை, ஊராட்சிகளில் 10 பேரை பலி வாங்கியதாக கூறப்படும் அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை கேரள வனத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    அதன் பின்பு தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. அங்கு வனத்தை விட்டு வெளியேறி தமிழக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி கம்பம் நகருக்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்தது.

    பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சண்முகாநதி அணையை ஒட்டியுள்ள பகுதியில் தஞ்சமடைந்தது. அதனை நேற்று முன்தினம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதியான முத்துக்குழி பகுதியில் விட்டுள்ளனர்.

    அரிசி கொம்பன் யானையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என நெல்லை, குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே யானையின் இருப்பிடத்தை உறுதி செய்ய வலியுறுத்தி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் அரிசி கொம்பன் யானையை மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியிலேயே விட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    செண்பகத்தொழு குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் படாதபாடு படுத்தி மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் ஆரம்ப கால வசிப்பிடம் மூணாறு வனப்பகுதியை ஒட்டியே இருந்தது. எனவே அதனை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் இருந்தவரை அரிசி கொம்பனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஆனால் பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது என்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

    • 30 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது, 15 முதல் 18 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்டோா் என மொத்தம் 21 லட்சத்து 83 ஆயிரத்து 700 போ் உள்ளனா். இதில் தற்போது வரையில் 21 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு முதல் தவணையும், 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 2, 681 மையங்களில் 30 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 18, 831 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    வெள்ளமலையில் சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் அம்பலக்காரன்பட்டி அருகே உள்ளது வெள்ள மலை. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிட்கோஅமைப்பதற்காக அரசு அதிகாரிகள் இடத்தை பார்வையிட வந்த போது அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்புதெரிவித்தனர்.

    இதுகுறித்து மேலூர் தாலுகா அலுவலகத்தில் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 66 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் அப்பகுதியில் இன்று காலை சென்னையிலிருந்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், செயற்பொறியாளர் இணை இயக்குனர் மற்றும் உயரதிகாரிகள் அவ்விடத்தில் சமத்துவபுரம் அமைப்பதற்காக இடத்தை பார்வையிட வந்தனர்.
     
    அப்போது அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இப்பகுதியில் அதிகளவு மான்கள் வாழ்கின்றது. மற்றும் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. எனவே இங்கு சமத்துவ புரம் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இதையடுத்து அதிகாரிகள் உங்கள் கருத்தை அரசுக்கு தெரிவிப்பதாக கூறி அங்கி ருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது அவருடன் மேலூர் வட்டார வளர்ச்சி அலு வலர் பாலச்சந்தர், அம்பலக்காரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி ராமையா மற்றும் யூனியன் அலுவலர்கள் உடன் வந்திருந்தனர்.
    ×