search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்1 பி விசா"

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி ரூபாயை அளிப்பதாக அறிவித்துள்ளது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #NationalistCongressParty
    மும்பை :

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி ரூபாயை அளிப்பதாக அறிவித்துள்ளது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த பாட்டீல் கூறுகையில், வெள்ள பாதிப்புக்கு இலக்கான கேரளா மாநிலத்துக்கு கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். மத்திய அரசு கேரளாவில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றத்தை பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #NationalistCongressParty
    ஆபாச படம் எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு பிளஸ்-1 மாணவியை மிரட்டிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
    போரூர்:

    வளசரவாக்கம், லட்சுமி நகரை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ஒருவரின் 16 வயது மகள், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இவருக்கும், நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான விக்னேசுக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி விக்னேஷ் நெருங்கி பழகினார். அப்போது மாணவியை ஆபாசமாக படம் எடுத்து தனது செல்போனில் வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது செல்போனுக்கு விக்னேஷ் அனுப்பினார்.

    ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். மேலும், மாணவியின் செல்போனுக்கு தொடர்ந்து அழைத்து தொல்லை கொடுத்து வந்தார்.

    இது பற்றி அறிந்த மாணவியின் தந்தை வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், “விக்னேஷ் என்பவர் மகளை காதலிப்பதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து உள்ளார். தற்போது ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் நாச்சியம்மாள் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேசை கைது செய்தார்.
    1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு விடுமுறை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. #SchoolExamDate #Holidays
    சென்னை:

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பதவியேற்ற பின்னர் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக புதிய பாடத்திட்டம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக சீருடைகள் அறிமுகம் என கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகிறது.

    அந்தவகையில் 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையிலும், அவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையாகவும் பொதுத் தேர்வு தேதிகள் வகுப்புகள் தொடங்கிய அன்றே அறிவிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு கால அட்டவணையும், 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த சுற்றறிக்கை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு:-

    * காலாண்டு தேர்வு- செப்டம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * இறுதித் தேர்வு- ஏப்ரல் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை.

    9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை:-

    * காலாண்டு தேர்வு- செப்டம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * இறுதித் தேர்வு- ஏப்ரல் 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை(9-ம் வகுப்பு மட்டும்).

    செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரையில் காலாண்டு விடுமுறை காலமாகவும், டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை காலமாகவும், ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை கோடை விடுமுறை காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன் கூட்டியே விடுமுறை காலம் அறிவிக்கப்பட்டிருப்பது, மாணவர்கள், பெற்றோர்களுடன் சுற்றுலா செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது போன்ற திட்டங்களை வகுப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
    கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. #KadaikuttySingam
    கார்த்தி - சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் விவசாயம் மற்றும் குடும்பத்தின் ஒற்றுமையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா இன்று நடந்தது. இதில் இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி, மௌனிகா, இளவரசு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.



    இதில் தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது மேம்பாட்டுக்காக ரூ.1 கோடியை 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா வழங்கினார். மேலும் விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. #KadaikuttySingam

    சென்னை பாண்டிபஜார் நகைக்கடையில் 1 கிலோ தங்க நகைகள் மாயமானது குறித்து ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை தியாகராயநகர் மற்றும் பாண்டி பஜார் நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள் மற்றும் அனைத்து வியாபார தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும்.

    அங்குள்ள ஒரு நகைக்கடையில் நகைகள் காணாமல் போனது. நேற்று இரவு கடையை மூடிவிட்டு சென்றபிறகு இன்று காலையில் வந்து பார்த்தபோது சுமார் ஒரு கிலோ தங்க நகைகள் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து நகைக்கடையின் மானேஜர் பாண்டி பஜார் போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து போலீசார் நகைக் கடைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். கடையில் உள்ள மற்ற நகைகளை கணக்கெடுத்து வருகிறார்கள். 11 நெக்லஸ் உள்பட தங்க நகைகள் காணாமல் போய் உள்ளது.

    நகைக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் நிர்மல், நிதிஷ் ஆகிய இருவரிடமும் விசாரணை நடக்கிறது. இவர்கள் 2 பேரும் கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் வேலையில் சேர்ந்துள்ளனர். #tamilnews
    தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி பல்லால் கடித்து காரை இழுத்த பிளஸ்-1 மாணவரை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி உள்ளார்.
    விழுப்புரம்:

    சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும் விழுப்புரத்தில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழுப்புரம் ரெயில்வே கேட் மாம்பழப்பட்டு சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரை பல்லால் கடித்து இழுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திருக்கோவிலூரில் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர் திருமால் என்பவர் அந்த காரை பல்லால் கடித்து இழுத்து சென்றார்.

    இந்த நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். காரை பல்லால் கடித்து இழுத்து சென்ற மாணவரை சாலையின் இருபுறமும் நின்று பார்த்த பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். ஆனால், அந்த மாணவரால் சிறிது தூரமே அந்த காரை இழுக்க முடிந்தது.

    இதைத்தொடர்ந்து காரை பல்லால் கடித்து இழுத்த மாணவர் திருமாலை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சால்வை அணிவித்து, பரிசு வழங்கினார். இதில் சுரேஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்தனர்.
    மசினகுடி:

    முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோவையை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது நண்பர்கள் 9 பேருடன் நீலகிரி மாவட்டம் முதுமலையை சுற்றி பார்க்கவும், தனியார் நிறுவனத்திற்கு விளம்பர படம் எடுக்கவும் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மசினகுடிக்கு வந்துள்ளார். மசினகுடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அவர்கள் நேற்று முன்தினம் காலை முதலே முதுமலை புலிகள் காப்பகத்தை ரகசியமாக ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்து வந்து உள்ளனர். புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாயார் பகுதிக்கு நேற்று மாலை சென்ற அவர்கள் வனப்பகுதியையும், மாயார் அணை மற்றும் நீர்மின்நிலையத்தையும் வீடியோ எடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் 10 பேரையும் மசினகுடி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதமாக விதிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    அபராத தொகையை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவையை சேர்ந்த சில காவல்துறை உயர் அதிகாரிகளிடம் செல்போனில் பேசினர். அதனையடுத்து அந்த அதிகாரிகள் சம்பந்தபட்ட 10 பேரையும் விட்டுவிடும்படி சிபாரிசு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மசினகுடி வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு சிறிய தொகையாவது அபராதம் விதிக்க வேண்டும் என்பதற்காக சந்தோசுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். அத்துடன் ஆளில்லா குட்டி விமானத்தை இயக்கிய கோவையை சேர்ந்த அகமது மற்றும் அவரது நண்பருக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    சிறந்த சுற்றுலா தலமாகவும், வனவிலங்குகளின் புகலிடமாகவும் விளங்கும் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. பொதுவாக புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வனத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் பெருந்தொகை அபராதமாக விதிக்காமல் 1 ரூபாயை மட்டும் அபராதம் விதித்து உள்ளனர். இதனை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளோம். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்தது கண்டனத்துக்குரியது. சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அரசு அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தவறான முன் உதாரணமாகி விடும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    இங்கிலாந்து முன்னணி வீரர் ஜாமி வார்டின் மனைவி ரெபிகா, உலக கோப்பை போட்டியில் கணவரின் ஆட்டத்தை நேரில் காண ரூ.1½ கோடிவரை செலவிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    மாஸ்கோ:

    இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் ஓய்வு இடைவேளையில் தங்களது குடும்பத்தினரை சந்திக்க அந்த அணியின் பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் அனுமதி அளித்துள்ளார்.

    இங்கிலாந்து முன்னணி வீரர் ஜாமி வார்டின் மனைவி ரெபிகா, உலக கோப்பை போட்டியில் கணவரின் ஆட்டத்தை நேரில் பார்த்து உற்சாகப்படுத்துவதற்காக 4 குழந்தைகளுடன் தனிவிமானத்தில் ரஷியாவுக்கு வந்துள்ளார். அவர் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலின் தினசரி வாடகை ரூ.22,500 ஆகும். மேலும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு பணியை கவனிக்கும் ஊழியர்களுக்கு தினமும் ரூ.90 ஆயிரம் சம்பளமாக வழங்குகிறார். 12 நாட்கள் ரஷியாவில் தங்கும் அவர் ஏறக்குறைய ரூ.1½ கோடிவரை செலவிடுவார் என்று தெரிகிறது. 
    மகராஷ்டிரா மாநிலம் புனேவில் 1 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மும்பை:

    சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதுபோன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. தலைநகர் டெல்லியில் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. 

    இந்நிலையில், மகராஷ்டிரா மாநிலம் புனேவில் 1 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புனே நகரில் தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கூலி வேலை செய்து வருகிறது. அந்த குடும்பத்தினர் அங்குள்ள ஒரு பகுதியில் சாலையோரம் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்த அவர்கள் எழுந்த அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

    அந்த தம்பதி அருகே தூங்கிக்கொண்டிருந்த அவர்களது ஒரு வயது பெண் குழந்தை காணமல் போனது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி பதிவை சோதித்த போது ஒருவர் அந்த குழந்தையை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் அப்பகுதிக்கு அருகில் இருந்து அந்த குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிசிடிவி பதிவுகளை வைத்து அக்குழந்தையை கடத்தி சென்ற மால்ஹரி பன்சோட் (22) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் புதுவை துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண். 1 ஏற்றப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    வங்க கடல் பகுதியில் திடீர் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனை எச்சரிக்கையாக அறிவிக்கும் பொருட்டு புதுவை துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண். 1 ஏற்றப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகம், புதுவையில் நேரடியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும், கடலோர பகுதிகளில் காற்று சற்று அதிகமாக வீசக்கூடும். கடல் சற்று சீற்றமாக காணப்படும்.

    புதுவையில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் தேதி வரை நீடிப்பதால் கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    வங்கதேசத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    கீழ்வேளூர்:

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் வீசும் சூறை காற்றில் தஞ்சை நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. திருவையாறு பகுதிகளில் வாழை மரங்கள் முறிந்து சேதமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களாக தஞ்சை, நாகை, திருவாரூரில் ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்தது. நேற்று வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. அதேநேரத்தில் அனைத்து இடங்களிலும் பலத்த சூறை காற்று வீசிய வண்ணம் இருந்தது.

    வங்கதேசத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு தொலை தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்பதை குறிப்பதாகும். இருந்தபோதிலும் நாகை மாவட்டத்தில் வானிலை மாற்றம் ஏதும் ஏற்படவில்லை வெயில் சுட்டெரிக்கிறது. கடல் பரப்பில் காற்று அதிகமாக வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர கதியில் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் கடல்களில் சுமார் 10 அடிக்கு மேல் ராட்சத அலைகள் எழும்பி வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் இன்றும் 3-வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வேதனையில் இருந்து வருகின்றனர்.



    வங்கதேசம் அருகே கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    கடலூர்:

    வங்கதேசம் அருகே கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதோடு கடல் சீற்றமாக காணப்படும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    ×