search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகை"

    • சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும்.
    • 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் அவுரித்திடலில் கொட்டும் மழையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், சரவணன், ரவி மற்றும் முத்துசாமி ஆகியோர் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் குமார் ரமேஷ், பால சண்முகம், அரசுமணி, ஞானசேகரன், குமார், பிரசன்னா பாபு , வெற்றி வேலன்உள்ளிட்ட பல்வேறு சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவி ன்படி, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் , சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை உடனடியா க நிரப்பிட வேண்டும்.

    21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், 2002 முதல் 2004 தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்கா லத்தை வரண்மு றைசெ ய்திட வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    இதில் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

    பங்கேற்றனர்.

    • நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொந்தகையில் திட்டச்சேரி-காரைக்கால் மெயின் சாலை உள்ளது.
    • இதனால் எதிரே இருசக்கர வாகனங்கள் கூட செல்ல வழி இல்லாமல் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொந்தகையில் திட்டச்சேரி-காரைக்கால் மெயின் சாலை உள்ளது.

    இந்த சாலையின் ஒருபுறம் நெடுஞ்சாலை துறை மூலம் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மற்றொருபுறம் வீட்டுக்கு வீடு குழாய்கள் மூலம் கேஸ் வழங்கும் தனியார் நிறுவனத்தின் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

    சாலையின் நடுவில் மட்டும் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதை உள்ளது.

    இதனால் எதிரே இருசக்கர வாகனங்கள் கூட செல்ல வழி இல்லாமல் உள்ளது.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பணிகளை நிறுத்த வலியுறுத்தி வாகனங்களை சிறை பிடித்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், திட்டச்சேரி போலீஸ் சிறப்பு
    சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரப்பிள்ளை,டென்னிசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவா ர்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் அமைதியாக கலந்து சென்றனர்.

    பின்னர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் முழுவதும் மூடப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பல்வேறு வகையான தலைப்புகளில், பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன், ஜே.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.
    • உயிர்வேதியல் துறை சார்பில் ஒருநாள் மாநில கருத்தரங்கம் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர்வேதியல் துறை சார்பில் ஒருநாள் மாநில கருத்தரங்கம் நடந்தது.

    கல்வி குழும தலைவர் ஜோதிமணி அம்மாள் தொடங்கி வைத்தார். கல்வி குழும செயலர் செந்தில்குமார், இணைச் செயலாளர் சங்கர் கணேஷ், ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    கல்வி குழும செயல் அலுவலர் சந்திரசேகர், கல்விசார் இயக்குனர் மோகன், கல்லூரி முதல்வர்கள் நடராஜன், முகமது இஸ்மாயில், துணை முதல்வர்கள் கலியபெருமாள், ராஜா கிருஷ்ணன் ஆகியோர் கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்துப் பேசினர்.

    பல்வேறு வகையான தலைப்புகளில், பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன், ஜே.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.

    நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரிகளில் இருந்து 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். உயிர் வேதியியல் துறை தலைவர் உமா வரவேற்றார். துறை பேராசிரியை சாந்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உயிர் வேதியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்சாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் உள்ள திரவுபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைப்பெற்றது.

    தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்சாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர், ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    ×