search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liberation Tigers Party"

    • 61 வது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றுவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார்

    உடுமலை

    திருமாவளவனின் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றுவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்குமாவட்டம் சார்பில் நடைபெற்றது.

    உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட எலையமுத்தூர்,செல்வபுரம், கல்லாபுரம், பூளவாடி, கண்ணவ நாயக்கனூர் ,தளி, தீபாலப்பட்டி, வல்லகுண்டபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம் தலைமையில் விழா நடைபெற்றது .கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார் . சிறப்பு அழைப்பாளராக ஈரோடு திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் ஜல்லிபட்டி முருகன் , மாநில நிர்வாகிகள் கிப்டன் டேவிட் பால், சத்தியமூர்த்தி,உடுமலை ஒன்றிய பொருளாளர் சக்திவேல்,எல்லை முத்தூர் ராமலிங்கம் ,செல்வபுரம் மாரிமுத்து ,தீபாலபட்டி திருமூர்த்தி, குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, கடத்தூர் புதூர் முகாம் துணைச் செயலாளர் பிரபு, கடத்தூர் குணசேகரன், மாதவராஜ் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் பெரியார் சிலை முன்பிருந்து தொடங்கி, திருப்பூர் பழைய பஸ் நிலையம் வரை பேரணி நடக்கிறது.
    • அவிநாசி பொன்.துரைசாமி , மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலாளர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    திருப்பூர்:

    அம்பேத்கர் நினைவுநாளையொட்டி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திட வலியுறுத்தி திருப்பூர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்கள் பேரணி இன்று மாலை 3மணிக்கு திருப்பூரில் நடக்கிறது. திருப்பூர் பெரியார் சிலை முன்பிருந்து தொடங்கி, திருப்பூர் பழைய பஸ் நிலையம் வரை பேரணி நடக்கிறது.

    பேரணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை தாங்குகிறார். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் துரைவளவன் வரவேற்று பேசுகிறார். முதன்மை செயலாளர் ஏ.சி. பாவரசு பேரணியை தொடங்கி வைக்கிறார். சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் பல்லடம் ரங்கசாமி, திருப்பூர் தெற்கு செல்வம், திருப்பூர் வடக்கு மூர்த்தி, காங்கயம் ஜான் நாக்ஸ் , துணை செயலாளர்கள் திருப்பூர் தெற்கு இளையராஜா, அவிநாசி பொன்.துரைசாமி , மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலாளர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    மண்டல அமைப்பு செயலாளர்கள் (கோவை-நீலகிரி) கலையரசன், திருப்பூர்-பொள்ளாச்சி வளவன் வாசுதேவன் ஆகியோர் அம்பேகர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

    உயர்நீதிமன்ற வக்கீலும், மாநில செயலாளருமான பார்வேந்தன் பேரணி சிறப்புரையாற்றுகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் யாழ்ஆறுச்சாமி, திராவிடர் விடுதலை கழகம் மாவட்ட தலைவர் முகில் ராசு, தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநகர தலைவர் சண்.முத்துக்குமார், ஆதித்தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி துைண செயலாளர் ஈழவேந்தன், ஆதிதமிழர் ஜனநாயக பேரவை நிறுவனர் பவுத்தன், தலித் விடுதலை கட்சி துணை பொதுச்செயலாளர் விடுதலை செல்வன், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் கனகசபாபதி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகின்றனர்.

    கிருத்துவ சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளர் கிப்டன் டேவிட்பால், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பழ.சண்முகம், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி குடியரசு, திருப்பூர் துணை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பேரணியை வழி நடத்துகின்றனர்.பேரணிக்கான ஏற்பாடுகளை விடுதலைசிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    ×